காய்கறி கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது புடலங்காய். புடலங்காயில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல கோளாறுகளை தவிர்க்கலாம்.
பித்த காய்ச்சல்
பித்தத்தினால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும் திறன் புடலங்காய்க்கு உண்டு. 250 கிராம் புடலங்காயை 300 மி.லி., தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி 200 மி.லி., குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும். புடலங்காயுடன் சிறிது நிலவேம்பு மற்றும் தேன் சேர்த்து பயன்படுத்தினால் பித்த காய்ச்சலுக்கு நல்ல மருந்தாகும். புடலங்காயுடன் கொத்துமல்லி இலை சேர்த்து சாப்பிட்டாலும் காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக அமையும்.
எடைகுறைப்பு
புடலங்காய் குறைந்த கலோரியும் அதிக நார்ச்சத்தும் கொண்டது. அதிக பசியை குறைக்கும். உடலிலுள்ள கொழுப்பை செலவழிக்கிறது. இன்சுலின் சுரப்பு குறைவான நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஏற்ற உணவாகும்.
இதய ஆரோக்கியம்
புடலங்காயில் கொலஸ்ட்ரால் இல்லை. இக்காய் இயல்பான இரத்த ஓட்டத்தை பராமரித்து இருதய நோயை தடுக்கிறது. இருதய படபடப்பு, வலி மற்றும் இருதய அழுத்தம் ஆகியவற்றை குணமாக்குகிறது. தினமும் இரண்டு கிண்ணம் புடலங்காய் சாறு அருந்துவது நல்ல பலனை தரும். இதய கோளாறு உள்ளவர்கள், புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.
நோய் எதிர்ப்பாற்றல்
வைட்டமின் சி மற்றும் குகுர்பிட்டாசின் அதிகம் கொண்டது புடலங்காய். இந்த சத்துகள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
தூக்கமின்மை
புடலங்காயில் நம் உடலிலுள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் செயல்பாட்டை அதிகரிக்கும் வைட்டமின் பி6 குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. ஆகவே, தூக்கமின்மையை போக்கும் ஆற்றல் புடலங்காயில் உள்ளது.
பொடுகு
புடலங்காய்க்கு பூஞ்சைக்கு எதிராக செயல்படும் திறன் உண்டு. ஈரப்பதம் இருப்பதால் பொடுகை அகற்றி, தலையின் மேற்பகுதியிலுள்ள சருமத்திற்கு ஊட்டம் தருகிறது. புடலங்காய் சாற்றை தலையில் தடவி அரைமணி நேரம் விட்டிருந்து பின்பு கழுவினால் பொடுகு தொல்லை நீங்கும். புடலங்கொடியின் இலையையும் அரைத்து தடவலாம்.
மலச்சிக்கல்
புடலங்காய் சாறு உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும் திறன் கொண்டது. செரிமானத்தை ஊக்குவிக்கும். புடலங்காயின் விதைகள் மலச்சிக்கலுக்கு தீர்வை தரும்.
மஞ்சள் காமாலை
அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால், புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து, அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து, 300 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை வடிகட்டி, மூன்று வேளை குடித்து வந்தால், மஞ்சள்காமாலை கட்டுக்குள் வரும்.
மூல நோய்
புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து, கூட்டாக செய்து தொடர்ந்து, 12 நாட்கள் வீதம் முறை விட்டு, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
வெள்ளைப்படுதல்
புடலங்காயை குழம்பு வைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதலை குணமாகும்; கருப்பை கோளாறுகளும் நீங்கும். மிகவும் மெலிந்த உடல் கொண்டவர்கள், சூட்டு உடம்புக்காரர்கள் அடிக்கடி புடலங்காயை சாப்பாட்டில் சேர்த்து வந்தால், உடல் பருமனடையும்.