வெள்ளரிக்காயில் ரொட்டியும் செய்யலாம் ட்ரை பண்ணி பாருங்க.. அப்புறம் அசந்துடுவிங்க!!

how to make cucumber rotti in tamil

by Logeswari, Oct 13, 2020, 21:05 PM IST

வெள்ளரிக்காயில் அதிக தண்ணீர் சத்து உள்ளதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.இதனை நாம் தினமும் சாப்பிடுவதால் உடலில் தண்ணீர் அளவை கூட்டுகிறது. வெள்ளரிக்காய் ரொட்டி தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது. சரி வாங்க வெள்ளரிக்காய் ரொட்டி எப்படி செய்வது குறித்து காணலாம்.

தேவையான பொருள்கள்:-

வெள்ளரிக்காய் - 1 1/2 கப்
தேங்காய் - 3/4 கப்
ரவை -1 கப்
கொத்தமல்லி இலை -சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - தேவையான அலைவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

முதலில் வெள்ளரிக்காய் மற்றும் தேங்காயை துருவி கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெள்ளரிக்காய், ரவை, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு தவாவில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி மாவை எடுத்து ரொட்டி போல் தட்டி கொள்ள வேண்டும்.

இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்றாக வேகவைத்து பொன்னிறம் ஆகும் வேளையில் ரொட்டியை எடுத்துக்கோங்க. பத்தே நிமிடத்தில் சுவையான, சூடான, ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி தயார்..

More Samayal recipes News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை