தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது வெங்காயத்தின் வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் 80 ரூபாய் வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது ஒரு கிலோ விற்கு ரூ.20 முதல் ரூ.30 உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்ததால் தமிழகத்தில் வெங்காயத்த்தின் விலை அதிகரித்துள்ளது.
ஈரோட்டில் நேற்று 100 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் 120 ரூபாயாக உயர்ந்தது. சின்ன வெங்காயமும் கிலோ 120 ரூபாயாக விற்கப்படுகிறது. மராட்டியம் மற்றும் கர்நாடகத்தில் இருந்து வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் கடந்த ஒரு வார காலமாக விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் துவக்கத்தில் வெங்காயம் கிலோ 40 ரூபாயாக இருந்த நிலையில் கிடு கிடுவென விலை உயர்ந்து 120 ரூபாயை எட்டியுள்ளது. விலை உயர்வால் வெங்காயத்தின் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் கடும் விலை உயர்வால் வெங்காயம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.