அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது உறுதியான நிலையில், அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மே2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது.
9, 10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.
.தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நம்பர் 16 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு, கடந்த ஜனவரி 20 ல் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 3ம் தேதி மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதன் பின்னர் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரசுக்கு எத்தனை சீட்? உதயநிதிக்கு சீட் உண்டா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.25) காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.
வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரத்திற்கு செலவு ரூ 64 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரு மாநில எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தகவல் பரிமாற்றங்கள் குறித்து தமிழக கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர்.