தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அரங்கேறியுள்ள நிலையில், அதிகாரிகள் மாற்றம் நடைபெறும் என பரவலாக பேச்சு அடிப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக டிஜிபியாக திரிபாதி மாற்றப்பட்டு ஷகில் அக்தர் டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தவறான தகவல் பரவி வருகிறது. ஏனென்றால், தற்போது தமிழக டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிகாலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரை மாற்ற வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இருக்காது.
அதே போன்று டிஜிபி பதவி என்பது மத்திய தேர்வாணையம் மூலம் நிரப்பபட்டு வருகிறது. அந்த வகையில் 1987 ஆண்டு batch சைலேந்திர பாபு, கரண்சிங் ஆகியோர் சீனியாரட்டி அடிப்படையில் இருக்கும் போது, 1989 ஆண்டு பேட்சை சேர்ந்த ஷகில் அக்தர் ஜூனியர் அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை.
அதே நேரத்தில் சீனியார்ட்டி அடிப்படையில் சைலேந்திரா பாபுவுக்கு வாய்ப்பு அதிகம். மாநிலங்களுக்கான டிஜிபி பதவி என்பதை தமிழக அரசின் சார்பில் 5 பேர் கொண்ட பட்டியல் சமர்ப்பிக்கப்படும் போது, அதில் இருந்து ஒருவரை மத்திய தேர்வாணையம் சீனியார்ட்டி அடிப்படையில் டிக் செய்யும், இது தான் நடைமுறை.
அதே போன்று சென்னை சிட்டி கமிஷனர் மாற்றப்படுவார் என்ற தகவலும் உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கும் பல அதிகாரிகளின் பெயர் அடிபடுகிறது. தற்போது ஏடிஜிபியாக இருக்கும் ரவி அடுத்த 1 வருடத்தில் ஓய்வு பெற உள்ளதால், ரவி ஐபிஎஸ்க்கும் வேறு ஏதாவது நல்ல பொறுப்பு காவல்துறையில் திமுக அரசு வழங்கும் என தெரிகிறது.