இரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு : முழு விபரம்…

Advertisement

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவோடு இரவாக மேலும் புதியக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பரவல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மேலும் புதியக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

மேலும் புதியக் கட்டுப்பாடுகள்:-

  1. அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  2. மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
  3. தனியாகச் செயல்படும் மளிகை. பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  4. வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
  5. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்.
  6. கடைகளிலும், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
  7. மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
  8. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  9. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும்.
  10. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை பட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  11. உணவகங்கள் தேநீர்க்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.
  12. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.
  13. உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
  14. வழிபாட்டுதலங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தொடரும்.
  15. உள் அரங்குகள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு உள்ளிட்ட விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
  16. திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
  17. மநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், ஸ்பா இயங்க விதிக்கப்பட்ட தடை தொடரும்.
  18. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், அழகு நிலையங்கள், ஸ்பா இயங்க தடை விதிக்கப்படுகிறது.
  19. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
  20. பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.
  21. சனி, ஞாயிறுகளில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை தொடரும்.

இந்தக் கட்டுப்பாடுகள் வரும் 6 ஆம் தேதி காலை 4 மணி முதல் 20 ஆம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>