எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்.. வைரலாகும் ட்விட்டர் போஸ்ட்..!

by Logeswari, May 3, 2021, 14:47 PM IST

மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட டுவிட் பதிவில் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள மு.க,ஸ்டாலின், 'மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!,' என்று தெரிவித்துள்ளார்.

You'r reading எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்.. வைரலாகும் ட்விட்டர் போஸ்ட்..! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை