Tuesday, Jun 22, 2021

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை! ரூ.37000 க்கு இறங்கிய தங்கத்தின் விலை! இன்றைய தங்கத்தின் விலை 30-10-2020!

by Loganathan Oct 30, 2020, 10:48 AM IST

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது . ஆனால் கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட விலை உயரத் தொடங்கியது .

ஆனால் வாரத்தின் இறுதியில் விலை இறக்கம் கண்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4741 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 7 விலை குறைந்து, கிராமானது ரூ‌ 4734 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)


1 கிராம் - 4734
8 கிராம் ( 1 சவரன் ) - 37872

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5121 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் கிராமானது ரூபாய் 7 விலை குறைந்து, கிராம் 5114 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5114
8 கிராம் - 40912

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 90 பைசா விலை உயர்ந்து, கிராம் 65.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65200 க்கு விற்பனையாகிறது.

You'r reading தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை! ரூ.37000 க்கு இறங்கிய தங்கத்தின் விலை! இன்றைய தங்கத்தின் விலை 30-10-2020! Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Business News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை