முதன்முறையாக டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

by Balaji, Oct 30, 2020, 10:44 AM IST

தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 50,000 ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டாஸ்மாக் கடைகளில் ஏனோ சோதனை நடத்தியது இல்லை. தமிழகம் முழுக்க எல்லா கடைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்கப்படுவதாகப் புகார் தொடர்ந்து வந்த போதிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மௌனம் காத்து வந்தனர்.

இந்த நிலையில் முதல் முறையாக டாஸ்மார்க் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரினை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள மூன்று டாஸ்மார்க் கடைகளில் முதல்முறையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பெண்ணாத்தூர் இல் உள்ள 2 டாஸ்மாக் கடைகளிலும் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டாஸ்மாக் கடைகளை மூடும் நேரத்தில் இரவு 8 மணிக்கு வந்து திடீரென வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 7 மணி நேரத்திற்கு மேலாக சூப்பர்வைசர் மற்றும் விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.இதில்கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகப் பெட்டி பெட்டியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடையில் உள்ள இருப்பிற்கும் விற்பனையான தொகைக்கும் நிறையக் குளறுபடிகள் இருந்ததால் இரவு 8 மணிக்குத் துவங்கிய சோதனை விடிய விடியத் தொடர்ந்து நடைபெற்றது.

You'r reading முதன்முறையாக டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை Originally posted on The Subeditor Tamil

More Vellore News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை