எருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை

வேலூர் அருகே எருது விடும் விழாவில் பங்கேற்ற காளைகள் மோதிக்கொண்டதில் ஒரு காளை உயிரிழந்தது. அந்த காளை மாட்டிற்குப் பேனர் வைத்து உரிமையாளர் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.

by Balaji, Jan 15, 2021, 20:31 PM IST

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.இதில் அணைக்கட்டு ஓசூர் கணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்தனர். கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற விவசாயி 4 லட்ச ரூபாய் கொடுத்து சமீபத்தில் ஒரு காளை மாடு வாங்கியிருந்தார். அதற்கு கரிமேடு கருவாயன் எனப் பெயர் சூட்டியுள்ளார். அணைக்கட்டு பகுதியில் நேற்று நடந்த எருது விடும் விழாவில் அந்த காளையைப் பங்கேற்க வைத்தார்.

விருது விழாவில் கரிமேடு கருவாயன் பங்கேற்று ஓடிய போது திடீரென எதிரே ஒரு மாடு வந்ததில் இரண்டு காளைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.இதில் கரிமேடு கருவாயன் பலத்த காயமடைந்து பலியானது. அந்தக் காளையின் உரிமையாளர் சுரேஷ் இன்று அந்த காளைக்குக் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மாலை அணிவித்து அதனை நல்லடக்கம் செய்தார் அவருடன் சேர்ந்து பூஜை செய்து பிரியா விடை கொடுத்து அனுப்பினர்.

You'r reading எருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை Originally posted on The Subeditor Tamil

More Vellore News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை