பீரியட்ஸ்: துரிதமாக்குவதற்கு எவற்றை சாப்பிடலாம் தெரிந்து கொள்ளுங்க!

Advertisement

பல பெண்களுக்கு மாதவிடாய் சரியான சுழற்சியில் வரும். சில நேரங்களில் சில காரணங்களால் அது தாமதிக்கக்கூடும். மனஅழுத்தம் அதிகமாதல், ஒழுங்கற்ற சாப்பாட்டு முறைகள், உடல் செயல்பாடு குறைவான வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை பீரியட்ஸ் என்னும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக்கூடியவையாகும்.
மகப்பேறு சிகிச்சையின்போது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கு மருந்துகள் கொடுக்கப்படும். மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கு சரியான உணவு முறையைக் கையாளுவது ஆரோக்கியமான முறையாகும். சினைப்பை நீர்க்கட்டி (பிடிஓடி மற்றும் பிசிஓஎஸ்) பாதிப்புள்ளவர்களும் சரியான உணவு முறையைக் கைக்கொண்டு பயன் பெறலாம்.

பப்பாளி

மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்குப் பப்பாளி நல்ல உணவாகும். இதிலுள்ள கரோட்டின் என்னும் பொருள் உடலில் ஆஸ்ட்ரோஜென் உற்பத்தியை துரிதப்படுத்துகிறது. அதன் மூலம் மாதவிடாய் சுழற்சி தூண்டப்படும். பப்பாளி கருப்பையை சுருங்கச் செய்யக்கூடியது. அதிலுள்ள படிவுகளை அகற்றக்கூடியது. ஆகவே பப்பாளி சாப்பிட்டால் மாதவிடாயை துரிதப்படுத்த முடியும். ஆகவேதான் கருவுற்ற பெண்கள் தொடக்க காலத்தில் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பப்பாளி சாப்பிடுவது அல்லது பப்பாளி ஜூஸ் பருகுவதன் மூலம் பீரியட்ஸை ஒழுங்குபடுத்த முடியும்.

பேரீச்சை

பேரீச்சை (டேட்ஸ்) குளிர்காலத்துக்கு ஏற்ற நல்ல உணவாகும். இது உடலில் வெப்பத்தை உண்டுபண்ணுகிறது. பேரீச்சையைப் பாலில் ஊறவைத்து அல்லது வேறு விதங்களில் தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரமாகத் தொடங்குகிறது. மாதவிடாயை தடுக்கும் பின்னணி காரணங்கள் இருக்குமாயின் இரும்பு சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ள பேரீச்சை அவற்றை சரி செய்து பீரியட்ஸை சீக்கிரமாக வர வைக்கிறது.

வெல்லம்

வெல்லம் சாப்பிட்டால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடலில் இரும்பு சத்து அதிகமாக உற்பத்தியாகும். இதன் காரணமாக மாதவிடாய் சுற்றிலுள்ள குழப்பங்கள் அகலும். சினைப்பை நீர்க்கட்டி (பிசிஓஎஸ்) தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து வெல்லம் சாப்பிடவேண்டும். வெந்தயத்தை நீரில் அவித்து, அதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் பீரியட்ஸ் சீக்கிரமாக வரும்.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி சத்துக்கு உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பண்பு உண்டு. சில உடல் நல வல்லுநர்கள், வைட்டமின் சி அடங்கிய பழங்கள் காய்கறிகளுக்கு உடலில் ஆஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்க வைக்கும் இயல்பு உள்ளது என்று கருதுகிறார்கள். வைட்டமின் சி சத்து அடங்கிய சில பழங்கள் உடலில் வெப்பத்தை அதிகரிக்கின்றன. இது கருவுறுதலுக்கு உதவும்.

இஞ்சி

மாதவிடாயை இயற்கையானவிதத்தில் தூண்டுவதில் இஞ்சிக்கு சிறப்பிடம் உண்டு. இது கருப்பையை சுருக்கி பீரியட்ஸ் வரும்படி செய்கிறது. இஞ்சியை டீயில், குழம்பில் கலந்து உட்கொள்ளலாம். இஞ்சி டீயில் சிலர் தேன் கலந்து குடிப்பர். இதுவும் உடலுக்கு நல்லது.

மஞ்சள்

மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதுடன், மகப்பேறு அடைவதற்கும் மஞ்சள் உதவுகிறது. கருப்பையை பொறுத்தமட்டில் மஞ்சள், இஞ்சியைப் போன்றே செயல்திறன் மிக்கது. இதுவும் ஆஸ்ட்ரோஜென் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. தினமும் 1 முதல் 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூளை உணவில் கலந்து சமைத்து சாப்பிடலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>