நீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை! ரூ.38000 தொட்ட தங்கத்தின் விலை! இன்றைய தங்கத்தின் விலை 31-10-2020!

by Loganathan, Oct 31, 2020, 11:20 AM IST

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது . ஆனால் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தும் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட விலை உயரத் தொடங்கியது. இந்த மாதத்தில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளதால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4734 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 26 விலை உயர்ந்து, கிராமானது ரூ‌ 4760 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 4760
8 கிராம் ( 1 சவரன் ) - 38080

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5114 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் கிராமானது ரூபாய் 26 விலை உயர்ந்து, கிராம் 5140 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5140
8 கிராம் - 41120

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 10 பைசா விலை உயர்ந்து, கிராம் 65.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65300 க்கு விற்பனையாகிறது.

You'r reading நீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை! ரூ.38000 தொட்ட தங்கத்தின் விலை! இன்றைய தங்கத்தின் விலை 31-10-2020! Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை