அந்நிய முதலீட்டு டிஜிட்டல் ஊடகங்கள் ஒரு மாதத்திற்குள் புதிய அனுமதி பெற மத்திய அரசு உத்தரவு

அந்நிய முதலீட்டுடன் தொடங்கப்படும் விகிதங்கள் ஒரு மாதத்திற்குள் புதிய அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

by Balaji, Nov 16, 2020, 19:44 PM IST

அந்நிய முதலீட்டுடன் தொடங்கப்படும் விகிதங்கள் ஒரு மாதத்திற்குள் புதிய அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் ஊடகத்தில் 26 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு, மத்திய அரசு கடந்த 2019 செப்டம்பர் 18ம் தேதி அனுமதி வழங்கியது. அதற்கான கொள்கையை ஒரு மாதத்துக்குள் பின் பற்றுவதற்கான பொது அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை பின்பற்ற, தகுதியான நிறுவனங்கள் ஒரு மாதத்துக்குள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.

i) இந்த அறிவிப்பின் கீழ், 26 சதவீதத்துக்கும் குறைவான அந்நிய முதலீடு பெற்றுள்ள நிறுவனங்கள், இன்றிலிருந்து ஒரு மாதத்துக்குள் கீழ்கண்ட தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

(அ) நிறுவனத்தின் விவரங்கள்/ பங்கு விவரங்கள்/ இயக்குநர்கள்/ பங்குதாரர்களின் பெயர்கள்.

(ஆ) உரிமையாளர்களின் பெயர்/ முகவரி.

(இ) அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை, அந்நிய செலாவணி மேலாண்மை விதிகள் 2019-இன் கீழ் விலை நிர்ணயம், ஆவணங்கள் மற்றும் அறிக்கையிடல் தேவைகளுக்கு இணங்குவது தொடர்பாக உறுதி செய்தல் மற்றும் தற்போதைய/முந்தைய அந்நிய முதலீடு விவரங்கள்.

( ஈ) நிரந்தர கணக்கு எண் மற்றும் சமீபத்தி லாப/நஷ்ட தணிக்கை அறிக்கை.

ii) 26 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அதிகமாக பங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்களும் இதே போன்ற விவரங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு ஒரு மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும். அடுத்தாண்டு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அந்நிய முதலீட்டை 26 சதவீதமாகக் குறைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

iii) புதிதாக அந்நிய முதலீடு பெற விரும்பும் எந்த நிறுவனமும், மத்திய அரசிடம் அந்நிய முதலீடு இணையதளம் மூலமாக முன் அனுமதி பெற வேண்டும்.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை