சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மின் சாதன உற்பத்தி நிறுவனம் தான் ரியல்மீ. இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2018 ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 50 மில்லியன் ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. அதிகமாக விற்பனை ஆகும் மொபைல்கள் வரிசையில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்ததுள்ளது. இரண்டாம் இடத்தில் Xiomi நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் அடுத்தடுத்த காலாண்டுகளின் வளர்ச்சி விகிதம் 132% எட்டியுள்ளது. மேலும் அடுத்தடுத்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 45% இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அசுரத்தனமாக எட்டியுள்ளது ரியல்மீ நிறுவனம்.
இந்த நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச், ஃபிட்னஸ் வாட்ச், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன் மற்றும் TWS ஏர் பட்ஸ் போன்ற மின்சாத பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் CEO மாதவ் ஷேத் கூறுகையில், நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாதன பொருட்களும் ஸ்மார்ட் போனை மையமாக கொண்டே இயக்கப்படும். இதற்காக 1+4+N AIOT திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். 1+4+N திட்டம் என்பது 1 மைய பொருள், அதன் மூலம் இயக்கப்படும் 4 ஸ்மார்ட் மையங்கள் அதன் மூலம் இயக்கப்படும் N செயற்கை நுண்ணறிவு கொண்ட பொருட்கள் என்பதே ஆகும்.
1 மையம்
இங்கு மைய பொருள் என்பது ரியல்மீ நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் ஆகும். இது மற்ற அனைத்து AIOT (Artificial Intelligence and Internet of Things) சாதனங்களை இயக்கும் மையமாக செயல்படும். மற்ற சாதனங்களை இயக்க ரியல்மீ மொபைல் சாதனத்தில் ஒரு ஆஃப் வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து சாதனங்களும் நிர்வகிக்கப்படும்.
4 ஸ்மார்ட் மையங்கள்
இந்த நிறுவனத்தின் முக்கியமான நான்கு மையங்கள் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகும். இதில் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இன்னும் சந்தைக்கு வரவில்லை ஆனால் ரியல்மீ நிறுவனத்தின் சவுண்ட் பார் சந்தையில் சக்கபோடு போட்டு கொண்டுள்ளது.