தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது! வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது! 24-11-2020

by Loganathan, Nov 24, 2020, 10:52 AM IST

கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

மேலும் பொருளாதார மந்த நிலை உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதன் தொடர்ச்சியாகத் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4748 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.104 குறைந்து, கிராமானது ரூ‌ 4644 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 4644
8 கிராம் ( 1 சவரன் ) - 37152

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5128 க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு ரூ.104 குறைந்து, கிராமானது 5024 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5024
8 கிராம் - 40192

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறையத் தொடங்கும். ஆனால் இன்று வெள்ளியானது நேற்றைய விலையில் கிராமிற்கு ரூ.1.80 பைசா விலை குறைந்து, கிராமானது 64.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 64500 க்கு விற்பனையாகிறது.

You'r reading தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது! வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது! 24-11-2020 Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை