முழு விவரம்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (நவம்பர் 22ம்தேதி) நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தலை நீதியரசர் ஜெயச்சந்திரன் நடத்தி வைத்தார். சங்கத் தலைவராக என்.முரளி தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் முழு விவரம்
தலைவர் - முரளி
துணைத் தலைவர் - ஆர்.கே.சுரேஷ் (முரளி அணி)
துணைத் தலைவர் - கதிரேசன் (சுயேச்சை)
கௌரவ செயலாளர் - ராதாகிருஷ்ணன் (முரளி அணி)
கௌரவ செயலாளர் - மன்னன் (டி.ஆர். அணி)
பொருளாளர் - சந்திர பிரகாஷ் ஜெயின் (முரளி அணி)
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் முழு விவரம் மற்றும் வாக்குகள்
1.ஆர்.வி.உதயகுமார் (598)
2. அழகந்தமிழ்மணி (470)
3.மனோபாலா (431)
4.பாலு கே (கே.பி.பிலிம்ஸ்) (425)
5. மனோஜ்குமார் (420)
6. ஷக்தி சிதம்பரம் (419)
7. சவுந்திரபண்டியன் எஸ். (414)
8. மாதேஷ்.ஆர். (397)
9. விஜயமுரளி என். (396)
10. உதயா ஏ.எல். (394)
11. பாய்ஜாடாம் (366)
12. டேவிட் ராம் ஜி.எம். (352)
13. பாபு கணேஷ் (343)
14. ராஜேஸ்வர் வேந்தன் (341)
15, ரத்னம் ஏ.எம். (339)
16. பிரபாகரன்.கே. (326)
17. ராஜ்சிப்பி கேகே (326)
18. பழனிவேல் (310)
19.ராமசந்திரன் எஸ். (308)
20. ப்ரிமுஸ் பி. என்கிற தாஸ் (297)
21. சரவணன் வீ (283)
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகத் தேர்வான என்.முரளி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த வெற்றியை 5 ஆண்டுகள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்து சிறப்பாகச் செயலாற்றிய அனைவரின் அன்பையும் பெற்ற என் தந்தை இராமநாராயணனுக்குச் சமர்ப்பிக்கிறேன்.தயாரிப்பாளர்களின் நம்பிக்கையினை ஒருபோதும் மறக்க மாட்டேன். ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களின் நலன் ஒன்றே இலக்கு என்ற வகையில் தயாரிப்பு தொழில் மேன்மையுடைய உறுதியுடன் உழைப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் என்னுடன் சேர்ந்து வெற்றி பெற்ற அனைவரின் சார்பிலும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு என்.முரளி என்கிற முரளி இராமநாராயணன் தெரிவித்திருக்கிறார்.