கை நிறைய படமிருக்கும் நடிகைக்கு புதிய படம்..

by Chandru, Nov 24, 2020, 12:15 PM IST

நடிகை ரெஜினா கெசண்ட்ரா தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் 7 (செவன்) என்ற படத்தில் மட்டுமே தமிழில் ரெஜினா நடித்திருந்தார். இந்த ஆண்டில் கை நிறைய படம் வைத்திருக்கிறார். பார்ட்டி, சக்ரா, கள்ளப்பார்ட், கசட தபற படங்களில் நடிப்பதுடன் தற்போது டாண் சேண்டி இயக்கும் பிளாஷ் பேக் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் படம் "ப்ளாஷ் பேக்" (Flash Back). டான் சேண்டி இயக்குகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது நம்ம ஆளு,காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக சசி இயக்கத்தில் சித்தார்த் ஜி வி பிரகாஷ் நடித்த "சிவப்பு மஞ்சள் பச்சை படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வெற்றி பெற்றதுடன் தற்போது எழில் இயக்கத்தில் ஜீ வி பிரகாஷ் நடிக்க ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் திரிஷ்யம்,தம்பி புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் திரிஷா நடிப்பில் ஒரு மும்மொழிப் படமாக "ராம்" படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மகாபலிபுரம்,கொரில்லா வெற்றிப்படத்தைத் தொடர்ந்து டான் சேண்டி கதை,திரைக் கதை வசனத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார் .ரெஜினா கெசன்டிரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது. அழகிய காதல் கதையினை முற்றிலும் அழகான பின்னணியில் அனைவரும் ரசிக்கும் வகையில் உணர்வுகளின் உயர்ப்போடு படமாக்கப்படும் இப்படம் பார்ப்பவர்கள் அனைவரையும் தாங்கள் சந்தித்த பாதித்த கடந்து வந்த உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரெஜினாவுடன் இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன், 96 பட புகழ் சூர்யா, மெர்சல் பட புகழ் அக்‌ஷன்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்,எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். எஸ் எஸ் மூர்த்தி கலை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். சான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார். ஷங்கர் சத்திய மூர்த்தி நிர்வாக தயாரிப்பு செய்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை