கவுண்ட்டவுன் ஸ்டார்ட்.. ஆரியை டார்கெட் செய்த போட்டியாளர்கள்..பிக் பாஸ் வீட்டில் நேற்று என்ன நடந்தது??

by Mahadevan CM, Nov 24, 2020, 12:40 PM IST

முந்தின நாள் இரவு பாலா, ஆரி, அனிதா, சனம் நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு எங்க ஆரம்பிச்சதுன்னு தெரியல. ஆனா பேசும் போது பாலா ஒரு விஷயம் சொல்றாரு. அர்ச்சனா டீம்ல இருந்து ஒருத்தர் கேப்டன் ஆகனும்னு அவங்க ஆன வரைக்கும் முயற்சி செய்யறாங்க. ஒரு டீமா விளையாடறாங்க்னு சொல்றாரு. இதை ரொம்ப நாளா பாலா சொல்லிட்டு இருக்காரு. சோம் கேப்டனாகாம தடுத்ததுக்கு ஒரே காரணம், அர்ச்சனா குரூப் கையில அதிகாரம் போய்டக்கூடாதுனு தான். அந்த பாயிண்ட் தான் நேத்தும் பேசினாரு பாலா. அப்போ குறுக்கிட்ட ஆரி, நான் ஒரு விஷயம் சொல்றேன்னு ஆரம்பிச்சாரு. "கேப்டன்சி டாஸ்க்ல வேணும்னே விட்டு கொடுத்ததாகவும், தன்னால இன்னும் 1 மணி நேரம் கூட விளையாடிருக்க முடியும்னும் சொன்னது எல்லாருக்கும் அதிர்ச்சி.

ஆரி ஒவ்வொரு தடவை நாமினேஷன் செய்யும் போதோ அல்லது கமல் சார் முன்னாடி ஏதாவது டாஸ்க் விளையாடும் போதும் சரி, யாரையும் பகைச்சுக்காம இருக்க ஒரு யுக்தி யூஸ் பண்றாரு. அதாவது எதிராளி இன்னும் நல்லா விளையாடனும்னு நான் அவரை நாமினேட் பண்றேன்னு சொல்லுவாரு.எதிராளி இம்ப்ரூவ் ஆகனும்னு இதை செய்யறேன்னு ஜஸ்டிபிகேஷன் கொடுப்பாரு. இது ஒரு ஸ்ட்ராட்டஜி. அவரோட நாமினேஷன் பார்த்தாலே தெரியும். அதாவது நேரடியான காரணங்களை சொல்லி யாரையும் பகைச்சுக்காம, டிப்ளமெட்டிக்கா விளையாடறது. பெரும்பாலான நேரத்துல ஆரி இந்த டெக்னிக் யூஸ் பண்ணிக்குவாரு. நேத்தும் இதையே தான் சொல்றாரு. ரியோ எப்படி விளையாடனும்னு பார்க்கனும், அவருக்காக விளையாடறாரா? இல்ல அவர் குரூப்ல இருக்கற 5 பேருக்கு விளையாடறாரானு இந்த வாரம் தெரிஞ்சுடும்னு தான் விட்டுகொடுத்ததுக்கு ஜஸ்டிபிகேஷன் சொல்றாரு ஆரி. இதை நான் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கேன்னு பாலா சொல்லிட்டு எழுந்து போய்டறாரு.

நாள் 51

என் பேரு மீனாகுமாரி பாடலோடு தொடங்கியது நாள். ரம்யா இந்த வாரம் கிச்சன் டீம் போல இருக்கு. அதனால டீ போட்டுட்டே கிச்சன்ல சாம், ஷிவானி கூட கெட்ட ஆட்டம் ஆடிட்டு இருந்தாங்க.

இந்த வார நாமினேஷன் ப்ராஸஸ். கம்பர்ட் சோன், ராஜா வீட்டு கன்னுகுட்டி, ரூல்ஸை மதிக்காதது, தனி ரூட்ல போறது, என்ற வார்த்தைகளை யூஸ் பண்ணி நாமினேட் ஆனவர்கள் பாலா, ஆரி, சோம், அனிதா, சனம், ரமேஷ், நிஷா 7 பேர்.

நாமினேஷன் ரூமுக்கு ஆரி போகும் போது "கவுண்ட்டவுன் ஸ்டார்ட்னு" கமெண்ட் அடிக்கறாரு ஜித்து பாய். அதை அப்பவே கண்டிச்சு பேசறாரு ஆரி. விளையாட்டுக்கு சொன்னதுனு ரமேஷ் சொல்லியும் ஆரி கேக்கல. கன்பஷன் ரூம்ல ரொம்ப கோவமா இருக்கறதா சொல்றாரு. நாமினேஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லாரும் எந்திரிச்சு போக ரெடியாக, ஆரி எல்லாரையும் நிக்க வச்சு பேசறாரு. ரமேஷ் மேல கோவபட்டதுக்கு சாரி கேக்கறாரு. அதோட நிறுத்திருந்தா பிரச்சினையும் இல்லை. ஆனா எப்பவும் போல எதுக்கு கோவபட்டேன்னு ஜஸ்டிபிகேஷன் கொடுக்கும் போது தான் பிரச்சினை ஆரம்பிச்சது.

"யாருமே அப்படி சொல்லாதீங்க, எனக்கு என்ன பேசனும்னு மறந்து போகுதுனு" ஆரி விளக்கம் கொடுக்கறாரு. நேத்து கூட் காமெடியா சொன்னோம், இன்னிக்கு விளையாட்டுக்கு சொன்னா கோவபடறிங்கனு ரமேஷ் சொல்றாரு. அப்ப தான் பாலா நடுவுல வராரு. மத்தவங்க பிரச்சினையில நீங்க குறுக்க வந்து கருத்து சொல்லும் போது இப்படித்தான் இருக்கும். முதல்ல நீங்க சொல்றதை நீங்களே பாலோ பண்ணுங்க. அப்புறமா மத்தவங்களுக்கு அட்வைஸ் கொடுக்கலாமுனு பாலா சொன்ன போது ஆரிகிட்ட அதுக்கான பதில் இல்லை. இருந்துட்டு போகட்டும், வச்சுக்கோனு பாலாவோட பாஷைல பதில் சொன்னாரு ஆரி. அதுக்கப்புறம் தான் கேப்டன்சி டாஸ்க்ல விட்டுக் கொடுத்த மேட்டர் வெளிய வருது.

உண்மையை சொல்லனும்னா அந்த இசத்துல அந்த டாபிக் பேச வேண்டிய அவசியம் இல்லை. இங்க ஆரி மேல பாலா வைத்த குற்றச்சாட்டு என்னன்னு பார்க்கனும். ஆரி சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு, கேமரா அட்டன்ஷுனுக்காக நிறைய சொல்றாரு. ஆனா அது எதையுமே கடைபிடிக்கறதே இல்லை எம்பது தான் ஆரி மேல வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதுக்கான ஒரு வாதமா பாலா இந்த மேட்டர் எடுத்திருக்கலாம். விட்டுக் கொடுத்தது தப்புனு சொல்லிட்டு இன்னிக்கு அவரே விட்டு கொடுத்திருக்காருனு சொல்றது தான் பாலாவோட பாயிண்டா இருக்கும். ஆனா கண்டிப்பா அது மட்டும் காரணம் இல்லேன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த கேம் ஷோவே எதிராளியை காலி செய்யறது தான். வாய்ப்பு கிடைக்கும் போது எதிரியை மாட்டிவிட்டு, அங்க நாமளும் ஸ்கோர் பண்ணிக்கனும். மைலேஜ் ஏத்திக்கனும். இது தான் அப்பட்டமான உண்மை. எல்லா சீசன்லேயும் இது தான் நடக்குது. இதுல ஆரி மேல கொஞ்சம் காண்டு இருக்கறதால கிடைச்ச வாய்ப்பை சரியா யூஸ் பண்ணிக்கறாரு பாலா.

கேப்டன்சி டாஸ்க்ல விட்டு கொடுத்தாரா? ங்கற கேள்வி அங்க இருந்த எல்லாருக்கும் ஷாக். சனம் கூட ஷாக்கானது தான் ஆச்சரியம். ஏம்மா நைட்டு அவர் சொல்லும் போது கூடவே இருந்தீங்க, "ஆமா, எனக்கும் தெரியும்னு" சொன்னீங்க. இப்ப வந்து அப்படியானு கேக்கறது என்ன நியாயம்.

சாம் கேப்டன் ஆன போது, பாலா விட்டு கொடுத்தது தப்பு, சாம்க்கு கேப்டனாக தகுதியே இல்லைனு சொல்லிட்டு, இன்னிக்கு அதே வேலையை ஆரி பண்ணிருக்காரு என்பது தான் பாலாவோட கேள்வி. இதே கேள்வியை தான் பின் பாயிண்டா ரம்யாவும் கேட்டாங்க. "நான் விட்டுக்கொடுக்கறது, என்னோட தோல்வி என்னோட முடிஞ்சுருச்சு, அது வேற யாரையும் பாதிக்கலைனு " ஆரி விளக்கம் கொடுத்தாரு. சரியான பாயிண்ட் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனா அதே சமயம் பாலா விட்டு கொடுத்து கேப்டன் ஆனது உங்களுக்கு சந்தோஷமானு ஒரு கேள்வி ஆரி கேட்டது ஞாபகம் இருக்கலாம். அதே ரூல் இங்க அப்ளை செய்யலாமே. ஆரி விட்டுக் கொடுத்து ரியோ கேப்டன் ஆனா ரியோ மட்டும் இங்க சந்தோஷப்படுவாரா?

சரி சோம், பாலா, சாம் விஷயத்துல பாதிக்கபட்டது யாரு? சோம் தானே. இப்பவரைக்கும் சோம் என்னை கார்னர் பண்ணிட்டாங்க, கூட்டு சேர்ந்து என் வாய்ப்பை பறிச்சுட்டாங்கனு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை. ஆன அந்த இஷ்யூவை தன்னோட மைலேஜ்க்காக யூஸ் பண்ணிகிட்டாரு ஆரி. இன்னிக்கு ஹவுஸ்மேட்ஸ் மொத்த பேரும் ஆரியை கேள்வி கேக்கறாங்க. காரணம் அன்னிக்கு ஆரி எடுத்து கொடுத்த அதே பாயிண்ட் தான். இன்னிக்கு ஆரி விளக்கம் கொடுக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு. ஆனா சாம்க்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கல. அந்த குற்றச்சாட்டை வழக்கு மன்றத்துல தன்னோட வாதத்துல தான் வச்சாரு. அதுக்கு பிறகும் சாம் கிட்ட எந்த விளக்கமும் கேக்கல.

அட, இதெல்லாம் ஒரு போட்டியா, நான் நினைச்சுருந்தா இன்னும் 2 மணி நேரம் கூட நின்னுருப்பேன். கழுதை போனா போகுதுனு விட்டுட்டேன். இப்படி சாதாரணமா ஆரி சொன்ன விஷயம் தான் இது. இதை நாம எல்லாருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல பேசிருப்போம். ஒன்னு தற்பெருமை, ரெண்டாவது நம்மோட இயலாமையை மறைக்கனும். மூணாவது கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலனு காட்டிக்கறது. ஆரியும் இதை தான் செஞ்சாரு. ஆக்சுவலா அந்த போட்டில ஆரி விட்டுக் கொடுக்கவே இல்லை. ஆரி அவுட் ஆனது இயல்பா தான் நடந்தது. ஆனா அவர் ஏற்கனவே கொடுத்த ஒரு ஸ்டேட்மெண்டுக்கு முரணா அவரே நடந்தது தான் இங்க பிரச்சினை.

இந்த பிரச்சினை ஆரம்பிக்கும் போதே ரியோ அங்க ஷாக்காகி நின்னுட்டு இருந்தாரு. விட்டுக்கொடுத்ததை பத்தி பாலா பேசிட்டு இருக்கும் போது,
நிஷா ஏதோ சொல்ல வர, இது நமக்கு சம்பந்தமில்லாத விஷயம்னு ரியோ சொன்னதை கேட்டு மயக்கமே வந்துடுச்சு. கூடவே அர்ச்சனா கிட்ட தன்னிலை விளக்கம் கொடுக்கறாரு ரியோ. கேம் முடிஞ்ச உடனே ஆரி கிட்ட "நீங்களா அவுட் ஆனீங்களானு" போய் கேட்ருக்காரு. அதுக்கு ஆரியும் ஆமானு சொல்லிருக்காரு. அர்ச்சனாவும் தீர்ப்பு சொல்லப் போற நீதிபதி மாதிரி கேட்டுகிட்டாங்க.

ஆரிக்கு கோபம் வரும், ஆனா விவாதம்னு வரும் போது டு தி பாயிண்டா பேச வரதில்லை. அதே மாதிரி ஒரு விவாதம் தன் கையை மீறி போகுதுன்னா உடனடியா அதை திசை திருப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சு காரணம் தேட ஆரம்பிச்சுடறாரு. ரம்யா கேள்வி கேட்ட போது, "நீங்க எவிக்‌ஷன் ப்ரீ பாஸ்ல விட்டு கொடுத்தீங்க இல்லைனு" ஒரு கேள்வி கேட்டாரு. தன்னை ஜஸ்டிபை பண்ணிக்க, தான் மட்டும் அந்த தப்பை செய்யலைனு மத்தவங்களை மாட்டி விடற யுக்தி. அப்ப சாம் மேல வந்த கோபம் ஏன் ரம்யா மேல வரலைனு ஆரி கிட்ட கேட்ருக்கனும்.

அடுத்து அதுக்கு பதில் சொல்லும் போது ஹவுஸ்மேட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்ல ரம்யா முன்னோக்கி வராங்க. அப்ப ஆரி கை நீட்டி பேசறாரு, அப்ப ஆரி கையை தள்ளி விடறாங்க ரம்யா. "இப்ப என் கையை எதுக்கு தட்ட்இ விட்டீங்கனு" ரம்யாவை பேச விடாம சண்டைக்கு போனாரு. ஆனா ரம்யா அதுக்கு உடனே மன்னிப்பு கேட்டு தான் சொல்ல வந்த விஷயத்தை தொடர்ந்து சொன்னாங்க.

அடுத்து கேப்டன்சி டாஸ்க்ல மூத்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும், ஆரியை மட்டும் சூப்பர்வைஸ் செஞ்சதா ஒரு பொதுவான குற்றச்சாட்டு வச்சாரு. இது முந்தின நாள் நைட் பாலா சொன்ன பாயிண்ட். அர்ச்சனா குரூப் உங்களை உன்னிப்பா கவனிச்சாங்கனு தான் பாலா சொன்னாரு. ஆனா எல்லா ஹவுஸ்மேட்ஸையும் குறிப்பிட்டு ஆரி சொன்னது தான் தவறா போச்சு. இதையும் அவர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தன்னை டிபெண்ட் செய்துக்க அவருக்கு கிடைச்ச பாயிண்ட் இது. இந்த குற்றச்சாட்டை அர்ச்சனா குரூப் மேல மட்டும் வச்சுருந்தா அவங்க மட்டும் பேசிருப்பாங்க. ஆனா ஆரி பிரச்சினை திசை திருப்ப இதை யூஸ் பண்ணிட்டாரு.

கடைசி வரைக்கும் ரியோ பிரச்சினைல வரவே இல்லை. நீங்க விட்டு கொடுத்தது உண்மையானு ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுட்டே இருந்தாங்க சனம். சனம் கேக்கும் போது, ஆமா விட்டுக் கொடுத்தேன்னு சொன்னாரு. நிஷா கேக்கும் போது, இல்லைனு சொன்னாரு. அனிதா கேக்கும் போது எனக்கு கேப்டன்சில இண்ட்ரஸ்ட் இல்லைனு சொன்னாரு. மறுபடியும் சனம் கிட்ட எனக்கு அந்த கேமை அதுக்கு மேல தொடர விருப்பம் இல்லைனு சொன்னாரு. இதெல்லாமே நேத்து ஆரியோட ஸ்டேட்மெண்ட்.

ஆக்சுவலா இதுவரைக்கும் நடந்தது எல்லாமே சரியா நடந்தது. இதோட நிறுத்தியிருந்தா பாலவோட மிஷன் அக்காம்ப்ளிஷ்டுனு சொல்லிருக்கலாம். ஆனா.......

பாலாவை சரியா தூண்டி விட்டா அவரே அவருக்கு செக் வச்சுக்குவாரு. இதை நல்லா தெரிஞ்சுகிட்ட முதல் ஆள் சுரேஷ். குரூப்பிசம் பத்தி பாலாவுக்கு எடுத்து சொல்லி கொளுத்தி போட்சது அவர் தான். அடுத்து சனம். பாலாவை வச்சே நல்லா மைலேஜ் ஏத்திகிட்டாங்க. இதுக்கு முன்னாடி பாலா செஞ்ச அட்ராசிட்டீஸ், பேசிய தவறான வார்த்தைகள் எல்லாத்தையும் சபைல எடுத்து சொல்லி அதுக்கு மன்னிப்பும் கேட்டாரு பாலா. அதுல தான் போன வாரம் முழுசா அமைதியா இருந்தாரு. அந்த அமைதியை தான் கமல் சாரும் பாராட்டினார். ஆனா நேத்து வேதாளம் மறுமடியும் முருங்க மரம் எறிடுச்சு.

உள்ள பேசி முடிச்சுட்டு வந்த பின்னாடி வெளிய ரமேஷ், இன்னும் சிலரோட பாலா பேசிட்டு இருக்காரு. அப்ப வீட்ல இருந்து வெளிய வந்த ஆரி, மீண்டும் பாலாவை நோக்கி "உனக்கு என்ன பிரச்சினைனு" கேட்டுட்டே பேச வராரு. நான் உங்க கிட்ட பேசலைனு விலகி போறாரு பாலா. அப்ப அங்க உக்காந்துட்டு இருந்த ரமேஷ் அவரோட பிரச்சினையை பேசறாரு. அதாவது கவுண்ட் டவுன் ஸ்டார்ட் சொன்னதை பத்தி. நீங்க என்ன எக்சாமுக்கா போறிங்க, எல்லாத்தையும் மறந்துடுவேன்னு சொல்றதுக்குனு ஆரியை பார்த்து கேள்வி கேக்கறாரு. நான் அதை எக்சாம்பிளுக்கு சொன்னேன்னு சொல்லிட்டு இருக்கும் போதே, பாலா இடைல புகுந்து தறுதலைனு சொன்னாரே அந்த மாதிரினு ரெண்டு தடவை சொல்ல, ஆரம்பிச்சது வினை.

ஏற்கனவே கொதிநிலைல இருந்த ஆரிக்கு இன்னும் அதிகமா கோபம் வருது. அவரை மேலும் மேலும் இரிடேட் செய்யறா மாதிரி பாலாவும் நடந்துக்கறாரு. கையை நீட்டி பேசாதீங்க, இல்லேனா நானும் எதையாவது நீட்டி பேசுவேன்னு பாலா சொன்னது ரொம்பவும் அவமரியாதையான செயல். அந்த நேரத்துல ஆரி, ரமேஷ் கிட்ட தான் பேசிட்டு இருந்தாரு. அப்ப குறுக்க புகுந்தது பாலா தான். அதுல ரொம்ப உக்கிரமான ஆரி, ஆம்பளையா இருந்தா செய்டா பார்க்கலாம்னு சொல்ல, ஒரு விவாதம் சண்டையாகி, இன்னும் அசிங்கமான பக்கமா மாறிடுச்சு.

அங்க வந்த ஷிவானி பயந்து போய் கேப்டன் ரியோவை கூப்பிட, அவர் காமெடி பண்ணிட்டு இருந்தாரு. அம்மா கோண்டுனு கேள்விபட்டிருக்கேன் ரியோ அர்ச்சனா கோண்டு. யப்பா.. முடியல.

அதுக்கப்புறம் பாலாவை விடவே இல்லை ஆரி, பாலாவும் இன்னும் சரிக்கு சரி நின்னாரு. ஒரு கட்டத்துல பாலா யார்கிட்ட பேசினாலும் அதுக்கு தேடி வந்து பதில் சொல்ல ஆரம்பிச்சுட்டாரு ஆரி. ரெண்டு பேருமே கொஞ்சம் இடைவெளி விட்ருக்கலாம். பாலாவோட அரகன்ஸ் எதிர்ல நிக்கற யாரையுமே கோபப்படுத்த கூடியது. அதை அவர் மாத்தியே ஆகனும். இந்த சண்டை நடக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் ஆரி தான் இதுல குற்றவாளியா இருந்தார். ஆனா கடைசில பாலா தான் மெயின் குற்றவாளியா மாறிப்போனார். இனிமே அவர் என்ன நியாயம் சொன்னாலும் எடுபடாம போய்டும். இதெல்லாம் முடிஞ்துக்கு அப்புறம் பாலா மண்டைல பல்பு எரிஞ்சுருக்கனும். ஆஹா நம்மளை தூண்டி விட்டு அந்தாளு தப்பிச்சுட்டாரேனு யோசிச்சு மன்னிப்பு கேட்டுட்டே இருந்தாரு. கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்டதெல்லாம், சாரி பாலா. பெட்சர் லக் நெக்ஸ்ட் டைம்.

Eviction Topple Card ஒன்றை பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக அறிமுகபடுத்தினார். இதன் படி இந்த வார நாமினேஷன் ஆனவர்கள் தனக்கு பதிலாக இன்னொருவரை எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யலாம். நாமினேட் ஆன 7 பேரும் ஆக்டிவிட்டி ஏரியால பேசறாங்க. இந்த முறை முதல்ல இருந்தே வீட்டுக்குள்ள லைவா டிவில வர ஆரம்பிச்சது. ஒவ்வொருத்தரும் தனக்கு பதில் இன்னொருத்தரை நாமினேட் செய்யனும். சனம் 3 பேரை நாமினேட் செஞ்சாங்க. பாலா, ரமேஷ், சோம், ஆரி 4 பேரும் வெளிய வந்துட்டாங்க. மீதி இருக்கறது நிஷா, சனம், அனிதா தான். இதுல ரமேஷும், சோம் சேர்ந்து நிஷாவுக்கு அந்த பாஸ் வாங்கி தர முயற்சி செய்யறாங்க. ஆரி, சனம்க்கு சப்போர்ட் செய்ய, பாலா அனிதாவுக்கு சப்போர்ட் செய்யறாரு. சனம், அனிதா ரெண்டு பேருமே இந்த பாஸை எப்படியாவது வாங்கி ஆகனும்னு பிடிவாதமா இருக்காங்க.

பெரும்பான்மை படி முடிவெடுங்கனு பிக்பாஸ் சொல்லும் போது நிஷாவுக்கு அந்த பாஸ் போய்ருக்கனும். ஆனா அங்க தான் நிஷா டிவிஸ்ட் வச்சாங்க. ரொம்ப நேரம் போய்ட்டே இருக்கேனு யோசிச்ச அனிதா, நிஷாவே வச்சுகட்டும்னு சொல்லவும், அதெப்படி என்னை பார்த்து வச்சுக்கங்கனு சொல்லலாம், எனக்கு பிச்சையா போடறாங்கனு நிஷா ஆரம்பிச்சுட்டாங்க. நான் மக்களை பார்த்து ஜெயிச்சு வருவேன். அனிதாவே வச்சுக்கட்டும்னு சொன்ன உடனே, யப்பா அங்குசாமி, நீ நல்லா இருக்கனும்னு சொல்லி, தன்னோட ட்ரேட் மார்க் சிரிப்போட வாங்கிட்டாங்க அனிதா. அனிதாவுக்கு பதில் இந்த வாரம் நாமினேஷன்ல சம்யுக்தா இருக்காங்க.

நிஷா இப்படி பேசினதுல ரமேஷ்க்கு பயங்கர கோவம். ஆக்சுவலா அர்ச்சனா குரூப்ல இருக்கறவங்களுக்கு போகக் கூடாதுனு தான் பாலாவும் முயற்சி செஞ்சாரு. பெரும்பான்மை நிஷாவுக்கு இருக்குனு சொன்ன உடனே தன்னோட ஓட்டை சனம்க்கு மாத்த முயற்சி செஞ்சாரு. ஆனா நிஷாவுக்கு தான் கிடைக்கறதா இருந்தது, நிஷாவோட முட்டாள்தனத்தால அனிதாவுக்கு போய்டுச்சு.

இந்த மாற்றம் அனிதாவுக்கு சாதகம். யாருக்கு பாதகமா முடியும்னு பொறுத்திருந்து பார்க்கனும்.

You'r reading கவுண்ட்டவுன் ஸ்டார்ட்.. ஆரியை டார்கெட் செய்த போட்டியாளர்கள்..பிக் பாஸ் வீட்டில் நேற்று என்ன நடந்தது?? Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை