முன்புறம் செல்ஃபிக்காக 48 எம்பி முதன்மை மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் காமிராவுடன் டெக்னோ நிறுவனத்தின் கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. ஜனவரி 16ம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் தளத்திலும் நேரடி விற்பனை நிலையங்களிலும் இது விற்பனையாகும்.
டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.85 அங்குலம் எஃப்எச்டி+; 1080X2460 பிக்ஸல் தரம்; 20.5:9 விகிதாச்சாரம்; 90Hz ரெஃப்ரஷ் ரேட்
இயக்கவேகம்: 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை கூடுதலாக்கலாம்)
முன்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி
பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (குவாட் காமிரா)
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஜி90டி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; hios
மின்கலம்: 4500 mAh
சார்ஜிங்: 18W
பக்க அமைப்பில் விரல்ரேகை உணரி (fingerprint sensor) உள்ள டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்போன் ரூ.16,999/- விலையில் கிடைக்கும்.
டெக்னோ நிறுவனத்தின் பட்ஜெட் வகை ஸ்மார்ட்போன் ஸ்பார்க் கோ ரூ.8,499/- ரூபாயில் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.