ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா இன்று கோலாகலா ஆஃபர்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
மாதாமாதம் ஏதாவது ஒரு விசேஷமென ஃப்ளிப்கார்ட் அதிரடி ‘பிக் டே சேல்’ ஆஃபர் அறிவிப்பது வழக்கம் அந்த வகையில் இன்று தொடங்கும் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா வருகிற மே 16-ம் தேதி வரையில் அதிரடி விலைகுறைப்பு பொருள்களுடன் வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தக் காத்திருக்கிறது.
குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் போன்ற கேட்ஜட்ஸ் பொருள்களுக்குத்தான் ஆஃபர்கள் அதிரடி விலைக்குறைப்பு உள்ளது. கூகுள் பிக்சல் 2 மற்றும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்.எல் தான் தாறுமாறாக விலைக் குறைக்கப்பட்டுள்ளது. 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிக்சல் 2-வின் விலை 34,999 ரூபாய் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபொல், ஹோம் அப்லையன்ஸஸ், வீட்டுப் உபயோகப் பொருள்கள், ப்ர்னிச்சர் பொருள்கள் ஆகியவற்றுக்கும் அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிக் டே சேலின் போது ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டு மூலம் ஆன்லைன் பேமன்ட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10சதவிகித சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சிறப்பு விற்பனைப் பட்டியலி மொபைல், லேப்டாப் போன்ற கேட்ஜெட்ஸ் பொருள்களின் விற்பனைதான் டாப் பட்டியலில் உள்ளது. ஃப்ளிப்கார்ட் சேல் அறிவிக்கப்படும் போது வாடிக்கையாளர்களுக்கான பெரிய பயன் ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ மூலமாகத்தான் கிடைக்கும்.
இதில் தான் தள்ளுபடி விலைச் சலுகையும் அதிகம். ஃப்ளிப்கார்ட் விற்பனைத் திருவிழாவில்சலுகை விலைகளை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
ஆஃபர் சேல் என்பதால் இன்று ஒரே நாளிலேயே பல பொருள்கள் விற்பனை ஆகிவிட்டதால் முந்திக்கொள்பவருக்கு ஆஃபர் மழை. இல்லையென்றால் அனைத்துப் பொருள்களுக்கும் சிறந்த தள்ளுபடி விலைச் சலுகையை பெற முடியாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.