அய்யா விஷாலு, தமிழ்ராக்கர்ஸ் எங்கய்யா..?- கிழித்த டி.ராஜேந்தர்!

by Rahini A, May 13, 2018, 16:49 PM IST

’நடிகர் விஷால் அளித்த வாக்குறுதிகள் எங்கே?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் டி.ராஜேந்தர்.

நடிகர் சங்கத் தலைவர் விஷாலின் ‘இரும்புத்திரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த சூழலில் நடிகர் விஷாலை கிழித்தெடுத்துள்ளார் தமிழ் சினிமாவின் ஆல்-ரவுண்டர் டி.ரேஜேந்தர்.

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசுகையில், “தலைவர் விஷாலின் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு திரைப்படம் 200 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகக்கூடாது. ஆனால், விஷாலின் இரும்புத்திரை மட்டும் 300 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

தேர்தலில் நின்ற போது தமிழ் ராக்கர்ஸ் போன்ற திருடர்களைப் பிடித்து ஒழிப்பேன் என மார்தட்டிய விஷால், அதைச் செய்தாரா? தமிழ் தாய் வாழ்த்துக்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டியது கடமை. ஆனால், தயாரிப்பாளர் சங்க சந்திப்பில் விஷால் உள்ளிட்ட யாரும் எழுந்து நிற்காதது ஏன்?” என அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டு விளாசிவிட்டார் டி.ராஜேந்தர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அய்யா விஷாலு, தமிழ்ராக்கர்ஸ் எங்கய்யா..?- கிழித்த டி.ராஜேந்தர்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை