லாலு பிரசாத் மகன் திருமணத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாதத்தால் திருமண மண்டபமே களேபரமானது.
பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். லாலு மற்றும் ராப்ரி தேவி தம்பதியினரின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமணம் இன்று கோலாகலமாக பீஹாரில் நடந்தது.
திரை பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என திருமண விழா கோலாகலமாக நடந்து வந்தது. மணமகன் தேஜ் பிரதாப் மற்றும் மணமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அவரவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க மக்கள் கூட்டத்தால் திருமண மண்டபமே களேபரமானது.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து போக பொதுமக்க்ள் 7ஆயிரம் பேருக்கும் லாலு வீட்டு கல்யாணத்தில் செம விருந்து தயாராகியிருந்தது.
ஆனால், போதுமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இல்லாமலும் சரியாக மக்களுக்கு உணவு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலும் கல்யாண வீடு கலாட்டாவானது. கூட்ட நெரிசலில் மக்கள் ஒருவரோடு ஒருவர் மோதி விழுந்து கலாட்டாவானது.
கூடுதலாக, பொதுமக்கள் அவரவருக்குத் தேவையான உணவுகளை எடுத்துச்செல்லத் தொடங்கினர். சாப்பாடு சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே பாத்திரங்கள் உடன் மக்கள் எடுத்து ஓடத்தொடங்கினர். இதனால் கல்யாண வீடே குழப்பமானது.