ஐந்து மாதத்தில் 6% வீழ்ச்சி: சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு!

by Rahini A, May 18, 2018, 15:14 PM IST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் ஆறு சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சர்வதேச பொருளாதார  மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாகவும் இந்தியாவில் நிகழும் உள்நாட்டு வர்த்தக குழப்பங்களாலும், நிதி மோசடிகளாலும் இந்தியப் பங்குச்சந்தை சில காலமாகக் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதன் நீட்சியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதள பாதளத்தில் வீழ்ந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 அமெரிக்க டாலர்கள் என்ற கடுமையான விலையேற்றத்தை சந்தித்துள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான இறக்குமதியே கச்சா எண்ணெய் என்பதால் இதனது விலையேற்றமும் இந்திய பொருளாதார மதிப்பை நிர்ணயிக்கிறது.

மேலும் இந்திய வணிகத்தின் சில்லரை மற்றும் மொத்த வணிகத்தின் மீதான வீக்கமும் கூட இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தீர்மானித்துள்ளது. இன்றைய சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை