கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த வாக்குப்பதிவு நாளை மாலை நடைபெற உள்ளது.
கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.
இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன. அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது.
பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர் எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதற்கு அடுத்ததாக எடியூரப்பா தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ரம் உத்தரவிட்டது.
எடியூரப்பா கேட்ட இரண்டு வார கால அவகாசத்தை மறுத்து நாளை மாலை 4 மணி அளவிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com