விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம் - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

Dec 14, 2017, 17:33 PM IST

லண்டன்: இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்து திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் இங்கிலாந்தில் உள்ள ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால், இதில் ரூ,9 ஆயிரம் கோடியை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். தற்போது இங்கிலாந்திலேயே வசித்து வரும் மல்லையாவுக்கு அங்கு ஏராளமான நிறுவனங்களும், சொத்துக்களும் உள்ளன. அதைக் கொண்டு மல்லையா சொகுசு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இதனால், இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று சிபிஐ தரப்பில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, விஜய் மல்லையாவால் ஏமாற்றப்பட்ட 12 வங்கிகள் சார்பில் லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைத்து தங்களுக்கு உரிய தொகையை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், விஜய் மல்லையாவின் செலவுக்கு வாரம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு வழங்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

You'r reading விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம் - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை