இது இல்லைனா, உங்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பிளாக்.

உங்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பிளாக்

by Vijayarevathy N, Oct 3, 2018, 20:18 PM IST

ரிசர்வ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இஎம்வி என்னும் சிப் விரைவில் பொருத்தப்படும் என்ற தகவலை  வெளியிட்டுள்ளது.

பண மோசடி அதிகரித்து வரும் நிலையில், வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளின் விவரங்களை திருட வாய்ப்புள்ளது. எனவே வங்கிகளில் நடக்கும்  பண மோசடியை தடுத்து நிறுத்த இஎம்வி சி பொருத்திய கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளை வங்கிகளுக்கு வழங்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இஎம்வி சி பொருத்திய டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், இஎம்வி சிப் பொருத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்துள்ளவர்கள், அதனை வங்கியில் கொடுத்து இஎம்வி சிப் பொருத்திய டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை பெற்று கொள்ளுமாறு வங்கிகள் குறுஞ்செய்தியை  அனுப்பி வருகின்றனர். மேலும், இஎம்வி சிப் பொருத்தாத அட்டைகள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு முடக்கப்படும் என்றும் தெரிவிகப்பட்டுள்ளது.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை