தமிழகத்தில் 3 நாள் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்

heavy rain may continue in tamilnadu coastal districts

by எஸ். எம். கணபதி, Oct 22, 2019, 12:42 PM IST

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று(அக்.22) முதல் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இன்றும் பல இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்நிலையில், வடதமிழகம், தெற்கு ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும். ஆங்காங்கே மிதமான மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

You'r reading தமிழகத்தில் 3 நாள் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல் Originally posted on The Subeditor Tamil

More Chennai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை