இரண்டாவது முறையாக சென்னை ஐஐடி முதலிடம் !

Chennai IIT tops for second time

by Loganathan, Sep 14, 2020, 19:41 PM IST

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் , தனியார் அல்லது சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் , தனியார் அல்லது சுயநிதி பல்கலைக்கழகங்கள் , அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி , மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் என 6 பிரிவுகளின் கீழ் புதுமையான கண்டுபிடிப்புகள் சாதனை குறித்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் ( ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ) வெளியிடப்பட்டு வருகிறது .

அந்த வகையில் 2020 ம் ஆண்டிற்கான தரவரிசை வெளியிடப்படும் நிகழ்ச்சி கானொளி வாயிலாக நடந்தது . இந்த நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். மேலும் இதில் மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் , இணை மந்திரி சஞ்சய் தோத்ரே , உயர் கல்வி துறை செயலாளர் அமித் காரே , அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்த்ரபுரே , கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மதிப்பீடு செய்யும் குழுவின் தலைவர் பி.வி.ஆர் . மோகன் ரெட்டி , கல்வி அமைச்சகத்தின் தலைமை கண்டுபிடிப்பு அதிகாரி அபே ஜெரி , சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார் . அதில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரிவுகளில் 674 நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.தொடர்ந்து 2 வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பிரிவுகளின் கீழ் 496 நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Chennai News

அதிகம் படித்தவை