மொட்டை சுரேஷிடம் சீன் காட்டிய ரியோ.. பிக் பாஸ் வீட்டின் முதல் கேக் கட்டிங்.. நிஷாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்..

by Logeswari, Oct 13, 2020, 14:54 PM IST

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரத்தை இனிதே கடந்தது. மொட்டை சுரேஷின் பல லீலைகள்,அனிதாவின் யுக்திகள், எமோஷனல், சந்தோஷம் ஆகியவை பிக் பாஸ் வீட்டில் சென்ற வாரம் சிறப்பாக அரங்கேறியது.

8வது நாளான நேற்று ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தது ஒரு வாரமாய் திறக்கப்படாத ஆண்களின் படுக்கை அறை நேற்று திறக்கப்பட்டது. இதனால் ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் கூச்சல் போட்டு பிக் பாஸ்க்கு நன்றி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சமையல் அறையில் மொட்டை சுரேஷுக்கு சனம் அவர்களுக்கும் ஒரு குக்கரால் பிரச்சனை வந்தது. பிக் பாஸ் நேற்று ஹவுஸ் மெட்ஸ் அனைவருக்கும் பேஷன் ஷோவை போட்டியை நிகழ்த்த சொல்லியும் அந்த நிகழ்ச்சிக்கு ரியோவை தொகுத்து வழங்க சொல்லி கட்டளையிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக சனம் மற்றும் பாலாஜியை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியை அனைத்து போட்டியாளரும் சிறப்பாக நிகழ்த்தினர். அடுத்த போட்டியில் பாலாஜி மற்றும் சனம் இருவரும் சேர்ந்து ஹவுஸ் மெட்ஸ் அனைவரிடம் கேள்வியை கேட்டனர். அதில் பாலாஜி மொட்டையிடம் கேட்ட கேள்வினால் ரியோவுக்கும் சுரேஷுக்கும் சண்டை கொளுந்து விட்டு எரிந்தது. ஆனால் ரியோ தன்னை விட பெரியவர் என்று கூட பாராமல் அவரது பேச்சில் ஆணவத்தை காட்டினார். நேற்று வரை கொஞ்சம் சுமாராக போன பிக் பாஸில் இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Get your business listed on our directory >>More Bigg boss News