புட்ட பொம்மா நடிகையை பிரேர்னாவாக்கிய இயக்குனர்...

by Chandru, Oct 13, 2020, 15:40 PM IST

பிரபாஸ் 20 படத்திற்கு ராதே ஷ்யாம் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. சாஹோ படத்தை அடுத்து பிரபாஸ் ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி வெளியானது.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபாஸும், பூஜா ஹெக் டேவும் ரம்மியமான பின்னணியில் காதலில் லயித்திருப்பதுபோன்ற அழகான தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. இந்த போஸ்டர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே ராதே ஷியாம் படத்தில் பிரேர்னாவாக அட்டகாசமான தோற்றத்தில் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டரை படத் தரப்பு ரிலீஸ் செய்திருக்கிறது. அது வைரலாகி வருகிறது. ஆல வைகுந்தபுரமோலு தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுனுடன் புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடி கவர்ந்த பூஜா ஹெக்டே தற்போது ராதே ஷியாம் படத்தில் வசீகர தோற்றத்தில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். பிரேர்னாவாகியிருக்கும் புட்ட பொம்மா நடிகை பூஜா ஹெக்டேவுக்கு இன்று பிறந்த தினம் அவருக்குப் படக்குழு வாழ்த்து தெரிவித்து இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

Get your business listed on our directory >>More Cinema News