கொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுன... நேரம் பார்த்து பாலாஜிக்கு ஆப்பு வச்ச ஹவுஸ் மேட்ஸ்..

by Logeswari, Nov 20, 2020, 19:30 PM IST

தனியார் தொலைக்காட்சியில் மக்களை கவரும் விதமாக நான்கு வருடமாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் இறுதியில் தொடங்கும் இந்நிகழ்ச்சியானது பல போட்டியாளர்களுடன் கொண்டு 100 நாட்கள் நடைபெறும். வெளிநடப்பு எதுவும் அறியாமல் சிறப்பாக விளையாடி யாரு மக்களின் மனதை கவர்கிறார்களோ அவர்கள் தான் பிக் பாஸின் வெற்றியாளர்கள். இந்த வருடமும் பிக் பாஸ் 4 மிக பிரம்மாண்டமாக தொடங்க பெற்றது. முதல் இரண்டு வாரம் எதிர் பார்த்த அளவுக்கு சுவாரசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் நாள் ஆக ஒவ்வொருவரின் சாயம் வெளுக்க ஆரம்பித்தது. ஒரு சின்ன விஷயத்தை கூட எப்படி ஊதி ஊதி பெரிதாக்குவதை அனிதா மற்றும் சனமை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். பாலாஜியின் திமிர் பிடித்த பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது.

அதுவும் அண்ணன் தங்கச்சி டாஸ்கில் பாலாஜியும் ஷிவானியும் அடித்த லூட்டிக்கு அளவே இல்லாமல் போனது. ஆரியின் சமத்துவ பேச்சு மக்கள் அனைவரையும் கவர்ந்தது. சோமு இப்பதான் வாயை திறந்து சத்தமாக பேச ஆரம்பித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் நேற்று தான் பிக் பாஸ் அனைவருக்கும் உருப்படியான டாஸ்க் கொடுத்துள்ளார் என்று கூறலாம். இது நாள் வரைக்கும் போட்டியாளர்கள் சாப்பிட்டு, தூங்கி, சண்டை போட்டு.. இந்த மூன்று வேலைகளை மட்டுமே செய்து வந்தனர். அவர்களுக்கு சலித்ததோ தெரியவில்லை ஆனால் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் வெறுத்துவிட்டது. இந்த டாஸ்கில் முக்கியமானது அனைவரும் நேரத்தை சரியாக பின்பற்றுகிறார்களா என்பது தான்.. நேற்று கொஞ்சம் காமெடி கலந்து டாஸ்க் இனிதே முடிவு பெற்றது. பாலாஜிக்கு கொடுத்த டாஸ்க்கை செய்யாமல் தூங்கி கொண்டு இருக்க மற்ற போட்டியார்கள் பாலாஜியை எழுப்பியும் பாலாஜி டாஸ்க்கில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வைத்த டாஸ்க் நேற்றோட முடிந்தது.

இதலில் அர்ச்சனா அணி தான் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். மிகவும் குறைந்த மதிப்பெண்களை பெற்று பின் தங்கிய போட்டியாளர்கள் ரம்யா, சுஜி மற்றும் பாலாஜி. டாஸ்கில் குறைந்த மதிப்பெண் பெற்ற இந்த மூவரில் இருந்து யாராவது இரண்டு பேரை மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் போட்டியாளர்கள் ரம்யாவை காப்பாற்றி பாலாஜி மற்றும் சுஜியை ஓய்வறைக்கு தள்ளுகின்றனர். இதனால் பாலாஜி மிகவும் ஆத்திரப்படுவது போல இன்று ப்ரோமோவை முடித்தனர்.

You'r reading கொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுன... நேரம் பார்த்து பாலாஜிக்கு ஆப்பு வச்ச ஹவுஸ் மேட்ஸ்.. Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை