ஊரெங்கும் மணம் வீசும் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி??

Advertisement

நம் பாரம்பரிய உணவு என்றாலே மனதிற்குள் ஒரு சிறிய சந்தோஷம். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் மண் பானைகளை கொண்டு தான் சமைத்தனர். மண் பானையில் சமைக்கும் உணவு மிகுந்த சுவையாக இருக்கும். இது போன்ற பாரம்பரியம் மாறாமல் மண் பானையில் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-
பாசுமதி அரிசி- 1 கப்
வெங்காகயம் - 1 கப்
பச்சை பீன்ஸ் - 1 கப்
கேரட் -1 கப்
பட்டாணி -1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி சாறு- 1 கப்
புதினா இலை- தேவையான அளவு
நெய்- 4 ஸ்பூன்
தயிர்- 1 கப் மசாலா
பொருள்கள் (பட்டை,கிராம்பு)- தேவையான அளவு
பெருங்காயம்- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் பொடி- தேவையான
அளவு சீரகம்- தேவையான அளவு
கரம் மசாலா தூள்- தேவையான அளவு
ஏலக்காய்- தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:-
ஓரு பாத்திரத்தில் அரிசியை நன்கு அலசி 5-10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். மண் பானையில் நெய் சேர்த்து அதில் மாசாலா பொருள்களான பட்டை,கிராம்பு, பெருங்காயம்,சீரகம்,இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய காய்கறிகள் கேரட்,பச்சை பீன்ஸ்,பட்டாணி ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். நன்கு வதக்கிய பிறகு தக்காளி சாறு,தேவையான அளவு உப்பு,ஊறவைத்த அரிசி, அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பானையை மூடி வேக வைக்கவும்.

ஓரு கிண்ணத்தில் சூடான நிலக்கரி துண்டை எடுத்து பானையின் மேல் வைக்க வேண்டும். 10 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். கடைசியில் கொத்தமல்லியை தூவினால் சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>