ஆண்டவர் வருகை... அன்பு அன்னை அர்ச்சனா, உணர்ச்சிவசப்பட்ட சோம் - பிக் பாஸின் 50வது நாள்

Advertisement

இந்த சீசனோட 50வது நாள். ஆனா வீட்டுல இன்னும் 14 பேர் இருக்காங்க. இன்னும் 8 வாரம் இருக்கு, 8 எவிக்‌ஷன் வச்சா கூட பைனலுக்கு 7 பேர் இருப்பாங்க. சீக்ரட் ரூம் வேற இருக்கு. 5 லட்சம் எடுத்துட்டு ஒருத்தர் போவாங்க. எப்படி பார்த்தாலும் இந்த சீசன் ஓவர் கிரவுடட். என்ன ஐடியா வச்சுருக்காங்கனு தெரியல. வடிவேலு சொல்றா மாதிரி ரெண்டு ரெண்டு பேரா அனுப்பி விட்டு முடிச்சு விட வேண்டியது தான். ஹவுஸ்மேட்ஸ் தான் இதை செலிப்ரேட் பண்ணலை. நாம இந்த 50வது நாளை கொண்டாடுவோம்.

ஆண்டவர் வருகை. மேஜர் ஜெனரல் கெட்டப்ல வந்திருந்தார். 50வது நாள் ஸ்பெஷலா ரசிகர்கள் கூட காணொலில பேசினார். வெயிட் பிக்பாஸ் ரசிகர்கள் கிட்ட இல்ல, அவரோட ரசிகர்கள் கிட்ட. ரசிகர்கள் வரிசையா பேசிட்டு இருக்கும் போதே ஒரு பெண், பருவ நிலை மாற்றத்தை பத்தி பேச ஆரம்பிச்சாங்க. இவங்களை எங்கேயோ பார்த்துருக்கோமேனு ரொம்ப நேரம் யோசிச்சுட்டு இருந்தேன். சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை வந்த போது ஒரு பெண் வெளியிட்ட வீடீயோ வைரல் ஆச்சே. அந்த பெண் தான் இவங்க. பத்மபிரியா, சுற்றுச்சூழல் ஆர்வலர். ரைட்டு.....

அடுத்து அகம் டிவி வழியே அகத்திற்குள். 50வது நாள்னு ஆண்டவர் சொல்லித்தான் ஹவுஸ்மேட்ஸ்கு தெரியுது. கிரியேட்டிவ் டீம்னு யாராவது இருக்காங்களானு தான் தெரியல. பாவம் அவங்களே கன்ப்யூஸ் ஆகிட்டாங்க போல..

இந்த 50 நாள்ல ஒவ்வொருத்தரும் கொடுத்த பங்களிப்பு பத்தி 1 நிமிடத்துக்குள்ள சொல்லனும். முதல்ல டைம் கொடுக்காம எல்லாரையும் பேச வைக்கலாம்னு தான் முடிவு பண்ணிருப்பாங்க. அப்புறமா ஆரியும், அனிதாவும் பேசறது கண்ணு முன்னாடி வந்து போயிருக்கும். அதனால தான் 1 நிமிஷம் டைம் கொடுத்துருப்பாங்க.

1 நிமிஷ கவுண்டிங்கை பாலாவை பண்ணச் சொன்னாரு கமல் சார். பாலாவோட கவுண்டிங் பத்தி பேசி ஜாலியா கலாய்ச்சு விட்டாரு. பாலா பேச வந்த போது வேகமா கவுண்ட் பண்ணி ஜாலி பண்ணினார். இந்த சீசன்ல பாலா, ரம்யா தான் கமல் சாருக்கே பிடிச்ச கண்டஸ்டண்ட் போல.

ஒவ்வொருத்தரும் பங்களிப்பு பத்தி பேசினாங்க. அனிதா மறக்காம தன்னோட "ஸ்பேஸ்" பத்தி பேசினாங்க. ஆரி தான் "நேர்மையா" விளையாடறதா எல்லாருக்கும் நினைவுபடுத்தினார். அர்ச்சனா "அன்பு" "அன்னை" மறக்காம கோடிட்டு காட்டினாங்க.30 செகந்டுக்குள்ள ஆரி பேசி முடிச்சதுக்கு, எக்சலண்ட்னு சொல்லி பாராட்டி கையெல்லாம் தட்டினாருன்னா, எவ்வளவு பாதிக்கபட்டிருக்காருனு பாருங்க.

சோம் பேசும்போது ரொம்பவும் உணர்ச்சிவசபட்டார். இது கிட்டத்தட்ட ஒரு மேடைப்பேச்சு மாதிரி தான், இடைவிடாம பேசனும். கொடுக்கப்பட்ட நேரத்துக்குள்ள சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்கனும். சோமோட அதிகபட்ச பயமே, எங்கே நடுவுல திக்கிருவோமோங்கற பயம் தான். பேசும் போது நிறுத்தி பேசினதுக்கு அது தான் காரணம். மத்தவங்க முன்னாடி மறுபடியும் ஒரு காட்சிப் பொருளா மாறிட்டோமேங்கற எண்ணம் தான் அவரோட கண்ணீருக்கு காரணம்னு நினைக்கிறேன். கமல் சார் அவரை தட்டி கொடுத்து பாராட்டினது பாசிட்டிவ். கதாசிரியர் கலைமணியோட கதையை சொன்னது நெகிழ்ச்சி. அதே சமயம் இந்த விஷயத்துல அர்ச்சனா, ரியோவோட ஓவர் ரியாக்‌ஷன் எரிச்சல். சோம் சேவ் ஆனதையும் சேர்த்து சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினார் கமல் சார்.

கவுண்டிங் செஞ்ச பாலா சேவ் ஆனது சொன்னதும் சோபாவை தாண்டி குதிச்சு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பாலா.ஏன்னு தான் தெரியல.

அடுத்து ஆஜித் கேப்டன்சி பத்தி டிஸ்கஷன் வந்தது. இந்த வாரம் எந்த பிரச்சினையுமே இல்லை. கேப்டன்சி விஷயத்துல யாரும் எந்த புகாரும் செய்யலை, பொரணியும் பேசலை. ஆனா ஆரிக்கு குறை சொல்ல நிறைய விஷயம் இருந்தது. மூத்த எல்லாரை காட்டிலும் சின்னபையன் ஆஜித். அதனால குறைகளை கூட நிறைகளா சொல்லி பாராட்டி விட்ருக்கலாம். ரொம்ப நுணுக்கமா சுட்டி காட்டிருக்க வேணாம்னு தோணுது. ஆரி, அர்ச்சனா ரெண்டு பேருமே குறை சொன்னாங்க.

ஆஜித்தை மனம் திறந்து பாராட்டினது சனம் தான். அவனோட வயசுக்கு நல்லாவே பண்ணிருக்கறதா தான் தோணுச்சு. அவருக்கு வேண்டியவங்களுக்கு லீனியண்டா இருக்கறதா சுச்சியும் சொன்னாங்க. கிட்டத்தட்ட ஆரியும் இதை தான் சொன்னாரு. இதை கேட்ட பாலா கொஞ்சம் சூடாவே ரிப்ளை பண்ணினாரு. முடியற நேரத்துல அனிதா எந்திரிச்சு, நாலு சீசன்லேயும் ஆஜித் தான் யங்கஸ்ட் கேப்டன்னு சொன்னாங்க. அதுக்கு கமல் சார் கைதட்டினதை இன்னொரு தடவை ஹாட்ஸ்டார்ல பாருங்க. அனிதா மேல எவ்வளவு கடுப்புல இருக்காருனு தெரியும்.

இந்த வாரம் திரு.கி.ராஜநாராயணன் எழுதிய "கோபல்லபுரத்து மக்கள்" புத்தகத்தை அறிமுகபடுத்தி வைத்தார்.

எவிக்‌ஷன்

இறுதியாக அனிதா, சாம், சுச்சி மூணு பேர் இருந்தாங்க. எப்பவும் கேட்கும் டெம்ப்ளேட் கேள்வியான, "யார் இருக்கனும்னு நினைக்கறிங்க" மத்த ஹவுஸ்மேட்ஸ் கிட்ட கேட்டார். சனம் மட்டும் அனிதா பேரை சொன்னாங்க. சுச்சியை யாருமே சொல்லலை. மத்த 10 பேரும் சாம் பேரை தான் சொன்னாங்க. ஆரி சாமர்த்தியமா சுச்சி வெளிய போக வாய்ப்பு இருக்குனு சொல்லி தப்பிச்சுகிட்டாரு. இதான் சேப் கேம். இதன் மூலம் தான் யாருக்கும் எதிரியில்லை, யாரையும் ஆதரிக்கவும் இல்லைனு காட்டிருக்காரு ஆரி. இது சக போட்டியாளர்களை குழப்பும் உத்தியாக கூட இருக்கலாம். ஆரிக்கு இப்போது எல்லாமே ஸ்டேட்டர்ஜி தான். சோம் கூட சம்யுக்தா பெயரை சொன்ன போது "நான் சொன்னேன்ல" என்ற ரியாக்‌ஷனை சனமிடம் கொடுத்தார் அனிதா.

சுச்சி தான் எவிக்ட் ஆனார். சாம் சேவ் ஆனதற்கு அனைவரும் கட்டிபிடித்து கொண்டிருக்கும் வேளையில் கடகடனு கதவுக்கே போய்ட்டாங்க சுச்சி. சனம், பாலா, அனிதா தவிர யார்கிட்டயும் சொல்லிக்கக்கூட இல்லை. அவங்க காயினை சனம், ஆரிக்கு கொடுத்துட்டு போய்ட்டாங்க. அவங்களுக்கே ஒரு பெரிய ரிலீஃப் தான் போல.

வீட்டிலிருக்கும் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ் பத்தியும் சுச்சியோட கருத்துகளை கேட்டறைந்தார் கமல் சார். "வேல் பிரதர்ஸ்" னு தங்களோட குரூப்புக்கு பேர் வச்சுருக்காங்களாம் அர்ச்சனா குரூப். கேமரால முன்னாடி டிக்ளேர் செஞ்சுட்டாங்களாம். ஆனா நமக்கு காட்டவே இல்லை. ஏ கியா ரே பிக்பாஸ். நிஷா, சாம், சோம், ரமேஷ், ஷிவானி பத்தி நெகட்டிவா சொன்னாங்க. ஆரி, பாலா, சனம், அனிதா, பத்தி பாசிட்டிவா சொன்னாங்க.

ஒரு நல்ல போட்டியாளரா இருப்பாங்கனு நினைச்ச சுச்சி 2 வாரத்துல போனது அதிர்ச்சி தான். ஆனா "வீட்டில் இருப்பவர்கள் பரிந்துரையின் பேரில்" அப்படினு கமல் சார் சொன்ன போது, நமக்கு தெரியாத சில விஷயங்கள் வீட்டுக்குள்ள நடந்திருக்கு. எதுவா இருந்தாலும் இந்த வெளியேற்றம் சுச்சிக்கு நன்மையாவே இருக்கனும்னு வேண்டிப்போம்.

இந்த வாரமாவது சுவாரஸ்யமா ஏதாவது நடக்குதான்னு பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>