கேப்டன்சி டாஸ்கில் உருவான குழப்பம்.. இந்த வார கேப்டன் ஜித்தன் ரமேஷ்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

Advertisement

நாள் ஆரம்பமே கேப்டன்சி டாஸ்க் தான். வீட்டுக்கு வெளியே ஒரு பெரிய நெட் கட்டி வச்சுருந்தாங்க. அதுல 3 கலர்ல க்யூப் இருந்தது. போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கலர் க்யூபை மட்டும் தட்டி விட்டு, தங்களுக்குனு கொடுக்கப்பட்ட ஏரியாவுக்குள்ள விழ செய்யனும். கேக்க சுலபமா இருந்தாலும், சிக்கலான விதிமுறைகளை கொடுத்திருந்தார் பிக்பாஸ். அப்பதானே பிரச்சினை வரும்.

பாலா, ரமேஷ், ரம்யா மூணு பேரும் தயாரானாங்க. உடல் வலிமை சம்பந்தப்பட்ட போட்டிங்கறதால ரம்யா இதுல ஒப்புக்கு சப்பானியா தான் விளையாட முடியும்னு முதல்லயே தெரிஞ்சு போச்சு.

கேப்டன் ரியோ தான் இந்த போட்டியை நடத்தி வின்னரை அறிவிக்கனும். வாரம் முடிஞ்சும் நமக்கு விடிவுகாலம் வரலையேனு விதியை நொந்துகிட்டே தான் வேலை பார்த்தார். போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே விதிமுறைகள் எல்லாத்தையும் சொல்லிட்டு இருந்தாரு. முக்கியமா பாலா கிட்ட தான் சொல்லிட்டு இருந்தாரு.

நெட்ல இருந்து வெளிய தள்ளி விடும் போது வேற கலர் க்யூப் உங்க ஏரொயால விழுந்தா நெகட்டிவ் பாயிண்ட்ஸ் கொடுக்கப்படும்னு சொன்னது தான் ஹைலைட். 3 பேர் ஒரே இடத்துல இருந்து விளையாடும் போது வெளிய போய் விழறதை கண்டுபிடிக்க, ஆரி, சோம், மற்ற ஹவுஸ்மேட்ஸ் உதவி செய்யனும்னு ப்ளான் பண்ணிருந்தாரு.

போட்டி ஆரம்பிச்சது. ரமேஷ், பாலாவுக்கு இடையில தான் போட்டி. இரண்டு பேருமே சமமா விளையாடிட்டு இருந்தாங்க. போட்டி முடிஞ்சதுக்கு அப்புறம் தான் பஞ்சாயத்து ஆரம்பிச்சது. பாலா ஏரியால மற்ற கலர் க்யூப் இருந்தது. நான் தட்டிவிடவே இல்லைனு ஒத்தகால்ல நிக்க ஆரம்பிச்சாரு பாலா. அவருக்கு சூப்பர்வைஸ் செய்யறதுக்கு ஆரியை நியமிச்ச ரியோவோட மன தைரியத்தை பாராட்டாம இருக்க முடியல.

போட்டி முடிஞ்ச அந்த நொடில இருந்தே பாலா பேச ஆரம்பிச்சுட்டான். ஒரே ஒரு கிரீன் க்யூபை மட்டும் தான் வெளிய அடிச்சதாகவும், மத்தபடி சரியா விளையாடினாதாகவும் சொல்ல ஆரம்பிச்சுட்டான். ஆரி கணக்கு சொல்லும் போது 4 க்யூப் கணக்கு சொன்னாரு. அதுல ஒன்னு மட்டும் நான் வெளிய அடிச்சேன்னு சாதிச்சுட்டு இருந்தான். ரியோவும் எடித்து சொல்லியும் கேக்கவே இல்லை. இதுல இன்னொரு சிக்கலும் வந்தது. பாலாஜி வெளியே தள்ளினதுல ரெண்டு க்யூப் ரமேஷ் இடத்துல விழுந்தது அதை எடுத்து தனியா வச்சுட்டாரு ஆரி. ஆனா கணக்கு சொல்லும்போது அதை மறந்துட்டாரு. மீண்டும் அதை பத்தி பேசும் போது அந்த ரெண்டுல ஒன்னு தான் பாலா அடிச்சதுனு சொன்னதும் உச்சகட்ட குழப்பம் வந்துடுச்சு.

ஆடியன்ஸ்க்கு குழப்பம் வந்துடக்கூடாதுனு அப்பவே ரீப்ளே போட்டு காமிச்ச பிக்பாஸுக்கு நன்றிகள். அந்த ரீப்ளேல பாலா சொன்னது பொய்னு ப்ரூப் ஆகிடுச்சு. ரம்யாவும், ரமேஷும் எதுவும் பேசாம இருக்கும் போது பாலா மட்டும் யார் பேச்சையும் கேக்கல. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தாரு.

பாலா அடிச்சதுல 6 க்யூப் வெளியே விழுந்துருச்சு அதான் உண்மை. ரிசல்ட் சொல்றதுக்கு முன்னாடியே நான் ஒன்னு மட்டும் தான் வெளிய அடிச்சேன்னு பாலா சொன்னது தப்பு. ஆரம்பத்துல கவுண்டிங் சொன்ன ஆரியும் குழப்பத்துல சொல்லிட்டதால இன்னும் சிக்கலாகிடுச்சு.

ஆரம்பத்துல விதிமுறைகள் சொன்ன ரியோ, கேப்டனின் முடிவே இறுதியானதுனு சேர்த்து சொல்லிருக்கனும். ஆனா அவர் குரூப் ஆள் ரமேஷ் இருந்ததால அதை சொல்ல தயங்கிருக்காரு. ரமேஷ் ஜெயிச்சா பேவரிசம் பண்ணிட்டாங்கனு சொல்லிடுவாங்களோனு ஒரு பயம். அதுவும்கூட பாலா விளையாடறதால ரொம்பவே ஜாக்கிரதையா தான் பேசினாரு. ஆனாலும் பாலா அடம்பிடிச்சது ரொம்பவே தவறான விஷயம். நேத்து அவர் சொன்னது பொய்னு ஹவுஸ்மேட்ஸுக்கு தெரிஞ்சிதுன்னா எல்லார்ரோட நம்பிக்கை, மரியாதையை இழக்க வேண்டி வரும்.

இதுல சனம் உள்ள புகுந்து ஆரி மாத்தி பேசினாருனு ஒரு குண்டை தூக்கி போட பாலா அதை பிடிச்சிட்டான். ஒரு வழியா 2 க்யூப் மட்டும் தான் மைனஸ் பண்ணினாங்க. பாலாவை விட ரமேஷ் ஒரு க்யூப் அதிகமாவே கூடைல சேர்த்துருந்தாரு. இறுதில ரமேஷ் வெற்றி பெற்று இந்த வார கேப்டன் ஆனார்.

சனம் சொன்னது ஆரிக்குகோபம் வந்துருச்சு. நான் சொன்னதை கணக்குல வச்சுக்காதீங்கனு முரண்டு பிடிச்சார். ஆனா பாலா சொன்னது பொய்னு மட்டும் ஆரிக்கு தெரிஞ்சுது. அவ்வளவு தான். இந்த வீட்ல ஒரு பிரளயம வெடிக்கும். கிச்சன்ல சனம் கூட திரும்பவும் அதையே பேசிட்டு இருந்தாரு பாலா.

வழக்கு மன்றத்துல சனம் மேல சுரேஷ் ஒரு கேஸ் போட்டாரு. ஞாபகம் இருக்கா. யார் பேசிட்டு இருந்தாலும் நடுவுல புகுந்து தன்னோட ஒபீனியன் சொல்றாங்கனு தான் கேஸ். அதை இப்பவும் தொடர்ந்து செஞ்சுட்டு இருக்காங்க சனம். தனக்கு முக்கியத்துவம் இருக்கனும், தன்னோட குரல் கேட்கப்படனும்னு எதிர்பார்த்து செய்யறாங்கனு நினைக்கிறேன். ஸ்ட்ராட்டஜியா யோசிச்சா கமல் சார் முன்னாடி பஞ்சாயத்து வரும் போது சாட்சியா விசாரிக்க வாய்ப்பிருக்கு. சோ அப்போ சனம் பேச வாய்ப்பு கிடைக்கும். இதை தொடர்ந்து செய்யும் போது இந்த வீட்டோட நடுவரா மாறக் கூட வாய்ப்பிருக்கு. இன்னொரு வியூல பார்த்தோம்னா, பேசக்கூடாதுனு யாராவது சொல்லும் போது அவங்களை வச்சு செய்யலாம். சோ எப்படி பார்த்தாலும் இது அவங்களுக்கு மைலேஜ் தான்.

ஆரி குழப்பத்துல சொன்னது உண்மை தான். ஆனா அது மாத்தி மாத்தி பேசறாருனு சொல்ல முடியாது. பாலாவோட அந்த குற்றச்சாட்டுக்கு இந்த சம்பவம் எந்த விதத்திலும் உதவாது. ஆனா ஆரியை வெறுப்பேத்தறக்கு பாலா இதை பயன்படுத்துவாருனு நினைக்கிறேன். ரைட்டு இந்த சம்பவம் எப்படிபிருந்தாலும் பாலாவுக்கு ஒரு ப்ளாக் மார்க்.

கேப்டன் ரமேஷ் டீம் பிரிக்கும் போது பாலாவுக்கு வைஸ் கேப்டன் பதவி கொடுத்தாரு. அதை ஏத்துக்க மாட்டேன்னு சொன்னதும் பாலாவோட சறுக்கல். அதுவும் ஒரு அதிகாரம் தான். அதுல கூட ஸ்கோர் செய்ய முடியும். ஆனா மறுத்து பேசினது அவசியமே இல்லாதது. அடுத்து வைஸ் கேப்டனா சோம் பேரை சொன்ன போது, ஆரி இடையில் நிஷா பேரை சொல்லி கொடுக்க சொன்னார். அவர் பரிந்துரை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சாதாரண நிகழ்வா தெரியும். ஆனா அப்படியில்லை.

அடுத்து நாமினேஷன். சனம், ஆரி, அனிதாலாம் ரெகுலர் கஸ்டமர் ஆகிட்டாங்க. இப்ப அதுல நிஷாவையும் சேர்த்துக்கலாம். புது எண்டரினா அது ஷிவானி, ஆஜித், ரம்யா 3 பேரும் தான். பாலாவின் நிழலில் இருக்கிறார், வீட்டின் அமைதியை குலைக்கிறார், ஏன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தோம்னு மறந்துட்டாங்க. பேக்கேஜ் வச்சுகிட்டு எல்லாரையும் தப்பா புரிஞ்சுக்கறாங்க. ஒப்பினியன் சொல்ல தயங்குறாரு, விளையாட்டு பிள்ளையாவே இருக்காங்க, இஷ்யுவை பெருசாக்கறாங்க, சிரிச்சுகிட்டே பேசி ஹர்ட் பண்றாங்க. போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினாங்க.

பாலாவோட ஷேடோல இருந்ததா சொன்னது ஷிவானியை ரொம்பவே பாதிக்குது போல. என்னை நாமினேட் செய்ய வேற காரணமே கிடைக்கலையானு கேட்டுகிட்டு இருந்தாங்க.

மினி குரூப் என்று அழைக்கப்படும் குரூப்ல இருந்து பாலாவை தவிர மீதி 3 பேரும் நாமினேஷன்ல இருக்காங்க. ஆஜித் வீக்கான கண்டஸ்டண்ட், சோ அதனால வந்திருக்கலாம். முதல் ரெண்டு நாமினேஷன்ல வந்ததுக்கு அப்புறம் ஷிவானி நாமினேஷன்ல வரலை. அந்த வாரத்துல அதிக அளவுல ஓட்டு வாங்கினாங்க. சோ அதனால அடுத்தடுத்து யாரும் அவங்க பேரை சொல்லலை. இந்த வாரம் அவங்க எவ்வளவு ஓட்டு வாங்குவாங்கனு பார்க்கனும். போன வாரம் ஆர்டரை பார்க்கும் போது கடைசி 3 இடத்துல இருந்தது, நிஷா, சனம், சோம் (ரமேஷ், சாம் இல்லாம). இந்த தடவை அனிதா, ஆஜித் இருக்கறதால இந்த வரிசை மாறும்.

போன தடவை எலிமினேஷன்ல ஜஸ்ட்ல மிஸ் பண்ணுன ரமேஷ் இந்த வாரம் கேப்டனாகி இன்னும் இரண்டு வாரம் இந்த வீட்ல இருக்கறதை தக்க வச்சுகிட்டாரு.

அர்ச்சனா குரூப்ல ரம்யாவை தான் நாமினேஷன் பண்ணினாங்க. ரியோ, நிஷா, ரமேஷ் 3 பேர் மட்டும் தான். காரணம் ரமேஷ்க்கு போன்ல பேசின விஷயம் தான்.

இந்த இடத்துல தான் ரமேஷ் கிட்ச, அர்ச்சனா கிட்ட, ரியோ கிட்ட ஆரி பேசினதை நினைவுபடுத்த விரும்பறேன். ரமேஷ ஏற்கனவே தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உள்ளுர கொஞ்சம் கடுப்புல தான் இருந்திருப்பார். ஆரி அதை சரியா தூண்டி விட்டாருனு தான் சொல்லனும். ரமேஷை எனக்கு கொடுத்துட்டு நீங்க ஷிவானியை எடுத்துக்கோங்கனு ரம்யா கிட்ட சொல்லிருக்காரு ஆரி. ரம்யா அதை ஏத்துக்கலை. ஒருவேளை ரம்யா அதை ஒத்துகிட்டு இருந்தா இன்னிக்கு நாமினேஷனுக்கு அதே ரீசன் சொல்லிருப்பாங்க. ரம்யா வலிமையான போட்டியாளர் இல்லைனு நிரூபிக்க்க துடிக்கும் ஆரிக்கு செம்ம பாயிண்ட் கிடைச்சிருக்கும். கேள்வி கேக்க பயந்துட்டாங்கனு முத்திரை குத்திருப்பாங்க.

அதே சம்யம் தான் கேக்கப் பிற கேள்வியால விளையும் பின்விளைவுகளும் ரம்யாவுக்கு தெரியும். தெரிஞ்சு தான் ரமேஷ் கிட்ட அவ்வளவு கிடுக்கிபிடியான கேள்விகள் கேட்டாங்க.

ரமேஷ் கிட்ட ஆரி சொன்ன விஷயமே வேற. தன்னோட நெருங்கிய நட்புல இருக்கறதால ஷிவானி கிட்ட கேள்வி கேக்க முடியாதுனு உங்களை கேட்ருக்காங்கனு சொன்னாரு.

அர்ச்சனா கிட்டயும் சாம்-ஆரி பிரச்ச்சினையின் போது ரம்யாவோச செயல்பாடுகளை விமர்சிச்சு பேசினாரு. ஏற்கனவே இருந்த நெருப்பு அணைஞ்சு போகாம இருக்கறதுக்கான வேலையை தான் ஆரி செஞ்சாரு. இது ஒரு ஸ்ட்ராட்டஜி தான்.

அதுக்கப்புறம் டாபர் டூத் பேஸ்ட் வழங்கிய டாஸ்க். நடந்தது. ஆரி அந்த போட்டியின் நடுவர். அதுல கூட பாயிண்ட்ஸ் பிரச்சினை வந்தது.

நாமினேஷன் செஞ்சதால என்னன்ன பிரச்சினைகள் வரப்போகுதுனு பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>