பட்ட பெயர் பிரச்னை.. ஜெயிலுக்கு போகும் அனிதா.. நேற்று பிக்பாஸில் என்ன நடந்தது??

Advertisement

அர்ச்சனா டீம் மனிதர்களாக மாறியபின் ரோபோக்களை வச்சு செய்யும் பணி தொடர்ந்தது. பாலா டீம் மாதிரி இல்லாம ரொம்ப வேக வேகமா ஒரு டைம்ல ஒரு டார்கெட் மட்டும் எடுத்துட்டு வெற்றிகரமா செஞ்சு முடிச்சாங்க. ஒரு முட்டையை வச்சே ஆஜித், அனிதா, பாலாவை முடிச்சுட்டாங்க. பாலாவுக்கு செகண்ட் சான்ஸ் வேற. முதல்ல புருவத்தை தூக்கினதுக்கு ஹார்ட்டை தூக்கிட்டாங்கனு ஒத்துக்கவே இல்லை. அதனால இன்னொரு வாய்ப்பு. எல்லாருக்கும் ஒரே வழியை தேர்ந்தெடுத்தது குறையா தெரிஞ்சுது.

அர்ச்சனா டாஸ்க்னு வரும்போது ரொம்ப ரொம்ப கவனமா, அதே சமயம் தன்னோட முழு பங்களிப்பையும் கொடுப்பாங்க. அது இந்த வார டாஸ்க்லேயும் ப்ரூவ் நிரூபிக்கப்பட்டது. பாலா டீம்ல 5 பேரை டிப்யூஸ் செஞ்சாங்க. அத்தனை டாஸ்க்லேயும் அர்ச்சனா இருந்தாங்க. அவங்க பர்பாமன்ஸ் நல்லாருந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் இந்த டீமோட கேப்டன் அவங்க. மத்தவங்க பர்பாமன்ஸ் பண்ணவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கனும். எல்லா டாஸ்க்கையும் இவங்களே முன்னாடி நின்னு, கம்ப்ளீட் செஞ்சதால அந்த டீம்ல வேற யாரோட உழைப்பும் வெளிய தெரியாம போய்டுச்சு. ஒரு கேப்டனா அவங்க அப்படி செய்யக்குடாது. முன்னாடி நின்னு வழி நடத்தலாம், பொறுப்பை பகிர்ந்து கொடுக்க தவறிட்டாங்கனு தோணுது.

பாலா டீம் ஆரம்பத்துல இருந்தே அடக்கி வாசிச்சாங்க. யாரையாவது ஹர்ட் பண்ணிடுவோமோங்கற பயம் அவங்க டீம்ல எல்லாருக்கும் இருந்தது. அப்படி இருந்தும் அர்ச்சனா ஹர்ட் ஆனது அவங்களுக்கு இன்னும் பயத்தை கொடுத்தது. ஆனா அர்ச்சனா டீமுக்கு எந்த குழப்பமும் இல்லை. பாலா டீம் முட்டையை கைல எடுக்க சொன்னாங்க, முகத்துல பூசிக்க சொன்னாங்க. இவங்க வாய்ல போட்டுக்க சொல்லி வேலையை முடிச்சுட்டாங்க. முட்டை சாப்பிடறவங்களால கூட அதை செய்ய முடியாது. அந்த வகையில அர்ச்சனா டீம் வேற ஏதாவது டாஸ்க் கொடுத்துருக்கலாம். ரொம்பவும் ஒன்சைடா போனா மாதிரி இருந்தது. "எனக்கு முட்டை பிடிக்காது, ஆனா நான் செய்யலையா"? னு அர்ச்சனா விளக்கம் கொடுத்தாங்க.

ஆரி மட்டும் கடைசி வரைக்கும் தாக்கு பிடிச்சாரு. அவர் கடைசி டார்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஜித், அனிதா, பாலாவுக்கு முட்டை டாஸ்க் கொடுத்த அர்ச்சனா டீம், ரியோ, நிஷாவுக்கு ஏன் கொடுக்கலேன்னு கேள்வி வர வாய்ப்பிருக்கு. யாரோ கேக்கவும் செஞ்சாங்க.

டாஸ்க் முடிஞ்சதுக்கு அப்புறம் ஏகப்பட்ட விளக்கங்கள். ரெண்டு டீமும் மாறி மாறி கேள்வி கேட்டு விளக்கம் கொடுத்தாங்க.

டாஸ்க் நடக்கும் போது, சொல்ற பேச்சை கேக்கலனு பாலாவை பார்த்து ஷிவானி சொல்லிருப்பாங்க போல. ஷிவானியே சொல்லிட்டாங்கனு மத்தவங்க முத்திரை குத்திடுவாங்களோனு பாலாவுக்கு வருத்தம். அதை பத்தி ஷிவானி கிட்ட பேசறாரு. அப்ப சனிக்கிழமை அவருக்கு குறும்படம் போட்ட நிகழ்வை சொல்லி கண்கலங்கறாரு பாலா. அந்த குறிப்பிட்ட கேப்டன்சி டாஸ்க்ல பாலா நின்னு விளையாடின ஏரியா சரியா தெரியலைனு ஒரு காரணம், ஹவுஸ்மேட்ஸ் சொல்லிருக்காங்க. ச்து நமக்கு காண்பிக்கப்படலை. யார் சொன்னதுனும் தெரியலை. அப்படி சொன்னவங்க கமல் சார் முன்னாடி அந்த காரணத்தை எடுத்து சொல்லலைனு வருத்தப்பட்டாரு.

ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பிரச்சினை பாலா மேல வந்துட்டே இருக்கு. இந்த வாரம் அப்படி எதுவும் வரக்கூடாதுனு ரொம்ப கவனமா இருக்காரு பாலா. அந்த சமயத்துல ஷிவானி சொன்னது ஒரு டாப்பிக்கா மாறிடுமோனு ஒரு பயம் பாலாவுக்கு இருக்கு. கமல் சார் சொன்னதை சரியா பாலோ பண்ணி "குட்" வாங்க முடியாம போய்டுமோனு ஒரு கலக்கம்.

நாள் 67

லக்சரி பட்ஜெட் டாஸ்க்கின் பர்பாமர்ஸ் தேர்ந்தெடுக்கும் நேரம். எப்பவும் வெள்ளிக்கிழமை தான் நமக்கு காட்டுவாங்க. ஆனா இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.

பெஸ்ட் பர்பாமருக்கு ரம்யா தான் பெரும்பாலானவர்களோட சாய்ஸ். அடுத்த இடத்துல பாலா. டாஸ்க்ல ஒழுங்கா நடந்தானே, அதுவே போதும்னு நினைச்சு பெஸ்ட் பர்பாமர் கொடுத்துட்டாங்க போல். அர்ச்சனாவும் பெஸ்ட் பர்பாமருக்கு வந்துருக்கனும்.

பாலாவோட பேரைச் சொல்லும் போது மொத்த ஸ்ட்ராட்டஜியும் பாலாவோடது தான்னு அழுத்தி சொன்னாரு ஆரி. பாலாவை பார்த்து கத்துகிட்டதா சொன்னாங்க அனிதா. இருந்தாலும் இந்த வாரமும் அந்த அடங்காபிடாரி பாலா அங்கங்க எட்டி பார்த்தாருனு தான் சொல்லனும். ஆனா அதையெல்லாம் கண்ட்ரோல் செஞ்சு விளையாடினது நல்ல விஷயம். கமல் சார்கிட்ட பாராட்டு கிடைக்கும்.

வாரம் முழுவதும் பெஸ்ட் பர்பாமருக்கு நிஷா பேரை சொன்னாங்க. அதுக்கு சொல்லப்பட்ட காரணமும் வலுவானதா இல்லை. ஆனா மெஜாரிட்டி அடிப்படையில நிஷா தான் ஜெயிச்சாங்க. அதுவரைக்குமே எல்லாரும் ரொம்ப ஜாலியா இருந்தாங்க. பார்க்கறதுக்கும் நல்லா இருந்தது.

வொர்ஸ்ட் பர்பாமர் தேர்ந்தெடுக்கும் போது தான் பிரச்சினை ஆரம்பிச்சது. ரமேஷை நாமினேட் செஞ்சதுக்கு அவர் கோபப்பட்டார். ரியோ வந்து அனிதாவை நாமினேட் செய்யும் போது ஒரு காரணம் சொல்றாரு. அதாவது டாஸ்க் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி குருப் டிஸ்கஷன் நடந்துருக்கு. அதுல ஒவ்வொருத்தருக்கும் பட்டப்பேர் வைக்கறதை பத்தி பேசும் போது ரியோ அதுக்கு ஒத்துக்கலை. பாலாவும், அனிதாவும் வற்புறுத்தவும் மத்தவங்களும் ஏத்துகிட்டாங்க. டாஸ்க்கும் முடிஞ்சிது. பாஸி அர்ச்சனா, பப்பட் சோம் இதெல்லாம் ஏற்கனவே அவங்களுக்கு கிடைத்த பெயர்கள். ஆனா மத்தவங்க அந்த பேர் சொல்றதை சம்பந்தபட்டவங்க விரும்பலை.

இந்த பட்ட பெயர்கள் விஷயத்துல அனிதா மட்டுமே காரணம்னு ரியோ சொன்னது தான் பிரச்சினைக்கு விதை போட்டது. முதல்ல இது பர்பாமன்ஸ் அடிப்படையா வச்சு தான் நாமினேட் செய்யஞ்ம். தன்னோட விருப்பத்தை மீறி ஒரு விஷயம் நடந்ததை சுவாரஸ்யக் குறைவா ரியோ சொன்ன காரணம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. அந்த காரணத்தை அனிதா அப்பவே கந்டிக்கறாங்க. குரூப்ல பேசும் போது ஒத்துகிட்டு, இப்ப தன் மேல எந்த தவறும் இல்லைனு மத்தவங்க முன்னாடி காமிச்சுக்கறாரு ரியோ. பட்டப்பெயர் கொடுக்கறதுல நிஷாவுக்கும் பங்கிருக்கு.

அனிதா நாமினேட் செய்ய வந்த போது ரியோ பேரை சொல்றாங்க. சிரிக்க வைக்கறதை மட்டும் செஞ்சுட்டு சேப் கேம் ஆடினாதாகவும், கேப்பியை மட்டும் டார்கெட் பண்ணி, தனக்கு கம்பர்ட்டபிளான ஆளோட விளையாடினதாகவும் காரணம் சொல்றாங்க.

குரூப் டிஸ்கஷன்ல பட்டப்பெயர் வைக்கும் போது நிஷாவும் பேர் சொல்லிருக்காங்க. ஷிவானிக்கு மேக்கப், ரம்யாவுக்கு சாப்ட் ஹர்ட், சோம்க்கு சுகமான சோம் இதெல்லாம் நிஷா சொன்னது. பாஸி அர்ச்சனா, பப்பட் சோம் இதெல்லாம் அனிதா சொல்லிருக்காங்க போல. சிரிக்க வைக்கறதுக்கு தான் பட்டப் பெயர் யூஸ் பண்ணினதா நிஷாவோட வாதம். அப்பத்தான் ரம்யா ஒரு வேலிடான பாயிண்ட் சொன்னாங்க. "சிரிக்க வைக்கறதுக்காக பேர் யூஸ் செஞ்சது சரின்னா, கோபப்பட வைக்கறதுக்கு பேர் வச்சதும் சரிதானே" என்று கேட்டது செம்ம பாயிண்ட். அந்த பாயிண்ட் கேட்ட உடனே தான் அர்ச்சனாவுக்கு கோவம் வந்துடுச்சு. உடனே ரியோவை உக்காரச் சொல்லிட்டாங்க.

குரூப் டிஸ்கஷன் முடிஞ்ச உடனே அந்த பேரெல்லாம் அனிதா வாயால சொல்ல வச்சுருக்காங்க. அதையும் இத்சியும் கனெக்ட் செஞ்சு, என்னை கோர்த்து விடறதுக்கு தான் அப்படி சொல்லிருக்காங்கனு சொன்னதும் நிஷா சண்டைக்கு வந்துட்டாங்க. பாலா சமாதானபடுத்தும் போது அவனுக்கும் திட்டு விழுந்தது.

பர்சனல் விஷயங்களை பேச வேண்டாம்னு குரூப்பா முடிவெடுத்துருக்காங்க. அதை மீறினது நிஷா. அவங்களால கேம் ஹால்ட் ஆச்சு. பிரச்சினை ஆச்சு. ஆனா வொர்ஸ்ட் பர்பாமன்ஸ்க்கு நிஷா பேர் வரல.

பட்ட பெயர் வைக்கலாம்னு குரூப்ல எடுத்த முடிவு. அதை காரணமா வச்சு அனிதாவை வொர்ஸ்ட் பர்பாமர்னு நாமினேட் செஞ்சது அநியாயம். அனிதாவுக்கு நடத்தப்பட்ட அநீதி.

அனிதாவுக்காக பாலா பேச வந்த போது, அர்ச்சனா எழுந்து அதை திசை திருப்பிட்டாங்க. வொர்ஸ்ட் பர்பாமன்ஸ்க்கு பாலா நாமினேட் செஞ்சது அர்ச்சனாவைத்தான்.

ஜெயிலுக்கு போகறதுக்கு முன்னாடி ரம்யா கிட்ட உடைஞ்சு போய் அழுதுட்டே பேசறாங்க அனிதா.

அனிதா ஜெயிலுக்கு போனதுக்கு அப்புறம் நிஷா தான் வொர்ஸ்ட் பர்பாமர்னு ரம்யா கிட்ட சொல்லிட்டு இருந்தார் ஆரி.

இன்னிக்கு அனிதாவோட பிரச்சினை தான் பெருசா வெடிக்கும்னு நினைக்கிறேன்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>