டான்சர், பாடகி, தொகுப்பாளர், நடிகை என பல திறமைகளை கொண்டவர் தான் விஜே சித்ரா. எப்பொழுதும் முகத்தில் சிரிப்பு குறையாதபடி அனைவரிடமும் பாசிட்டிவ்வாக பழக கூடியவர். இந்நிலையில் செவ்வாய் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நட்சத்திர ஓட்டலில் சின்னத்திரை சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. இது குறித்து பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன. அதாவது சித்ராவிற்கும் அவரது கணவருக்கும் இரண்டு மாதத்திற்கு முன்னரே திருமணம் ஆகி விட்டதாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீபகாலமாக கதிற்கும் முல்லைக்கும் நெருக்கமான சீன்கள் இருந்தது.இதனால் ஹேமந்த் அடிக்கடி சித்துவிடம் தகராறு செய்துள்ளார். சம்பவ நாளன்று வாக்குவாதம் எல்லை மீறி சென்றதால் சித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இவர் மனஉறுதி மிக்கவர். மற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வதே விரும்பாதவர் தன்னை எப்படி மாய்த்து கொண்டிருப்பார் என்று ரசிகர்கள், பிரபல நடிகை, நடிகர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் போன்ற அனைவரும் பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
சிலர் இது திட்டமிட்டு செய்த கொலையாக கூட இருக்கலாம் என்று ரேகா நாயர் மற்றும் ஷாலு ஷம்மு போன்ற நடிகைகள் துணிச்சலாக கூறி இருந்தனர். இந்நிலையில் நேற்று சித்ராவிர்க்கு கீழ்பாக்கம் உள்ள மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்து முடிந்தது. இதில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என்றும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் யாவும் அவருடைய நகத்தால் உண்டான கீறல் தான் என்று ரிப்போர்ட் வந்துள்ளது. போலீசின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை என்று முடிவாகியுள்ளதால் இவரின் தற்கொலைக்கு பின் யார் காரணம் என்ற கோணத்தில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறது.