ஆண்டவர் வருகை.. ஆரியின் குற்றச்சாட்டு.. ஆரி, பாலா சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது??

Advertisement

ஆண்டவர் தினம். நேர்மையாக விளையாட வேண்டும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், தனி நபருக்காக சட்டத்தை வளைக்கக் கூடாது என்று உள்ளே, வெளியே இரண்டுக்கும் சேர்த்து கருத்துச் சொன்னார். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். ஆனா ஒன்னும் நடக்கல. அதனால் அது நமக்கு வேண்டாம்.

ஆண்டவர் நேத்து போட்ருந்த கோட் காதி துணில செஞ்சது. இளைஞர்களும் இந்த மாதிரி முயற்சி செய்யனும்னு கேட்டுகிட்டாரு. அதுக்காக அவர் பேசி முடிக்கற வரைக்கும் ஹவுஸ்மேட்ஸ் நின்னுட்டே இருக்கனுமா என்ன.

முதல் ஓபன் நாமினேஷன் எப்படி போச்சுனு கேட்டாரு. 10 பேரும் அதுக்கு கருத்து சொன்னது தேவையில்லைனு தோணுச்சு. பொதுவான கருத்து கேட்டா போதும். ஆனா கண்டண்ட் இல்லாத குறை நேத்து முழுசும் நல்லா தெரிஞ்சுது. ஒவ்வொருத்தரும் பொறுமையா கருத்து சொல்லிட்டு இருந்தாங்க. நாமினேஷன்ல சண்டை வராம இருந்தது ஹவுஸ்மேட்ஸ்க்கு பெரிய நிம்மதி. நமக்கும் தானே.

நாமினேஷனுக்கு அப்புறம் அர்ச்சனா, சோம் ரெண்டு பேரும் குரூப்பிசம், நம்பர் கேம்பத்தி பேசிட்டு இருந்ததை பத்தி கேட்டாரு. அர்ச்சனா சரியா ஞாபகம் இல்லைனு சொல்லிட்டாங்க. தன்னை குரூப்பா நாமிமேட் செஞ்சது யாருனு ஞாபகபடுத்தி சொல்லிட்டு இருந்தாங்க. அனிதாவை நாமினேட் செஞ்சது அர்ச்சனா குரூப், அர்ச்சனாவை நாமினேட் செஞ்சது பாலா குரூப். அனிதா, ஆரி இவங்க எல்லாம். சுத்தி சுத்தி அதையே பேசிட்டு இருந்தாங்க.

அர்ச்சனா குரூப் இப்ப நாலு பேர் தான் இருக்காங்க. அதே மாதிரி பாலா குரூப்லெர்யும் 4 பேர் சேர்ந்து குரூப்பிசம் பண்றாங்கனு ஆரியும், அனிதாவும் சொல்லிட்டு இருந்தாங்க. ரம்யா, ஆஜித், ஷிவானி, பாலா 4 பேரும் ஒரு குரூப்பாம்.

ஆஜித்தையும், ஷிவானியையும் முன்னாடி நிறுத்தி விளையாடறதா பாலா மேல குற்றச்சாட்டு வச்சாங்க அனிதா. அதே குற்றச்சாட்டை ஆரியும் வச்சாரு. இதன் மூலம் அனிதாவும் ஆரியும் தனியா விளையடறதா ப்ரொஜக்ட் ஆகும்னு ப்ளான் பண்றாங்கனு நினைக்கிறேன். காரணம் போன வாரம் வரைக்கும் அர்ச்சனா குரூப் பத்தி தான் பேசிட்டு இருக்காங்க. இப்ப அந்த குரூப் வீக்கானதுக்கு அப்புறம் தான் பாலா குரூப் கண்ணுக்கு தெரியுது போலருக்கு.. அதுவும் இந்த வாரம் தான் தெரியுதுனு அனிதாவே சொல்றாங்க. . 75வது நாள் தான் புது குரூப்பை கண்டுபிடிச்சுருக்காங்க அனிதா.

ஷிவானி, ஆஜித் ரெண்டு பேரும் அங்க இருக்கறது ஆரிக்கு சுத்தமா பிடிக்கலைனு நல்லா தெரியுது. டைம் கிடைக்கும் போதெல்லாம் போட்டுத் தள்ளிடறாரு.

கோழி யாரு, நரி யாருனு சொல்லனும். அர்ச்சனா கோழியாகவும், பாலா, ஆரி ரெண்டு பேரும் நரியாகவும் செலக்ட் ஆனாங்க. இதுல அனிதாவும், ஆரியும் சொல்லிகிட்ட ரீசன்ஸ் தான் செம்ம.

ஆரி ஏதோ ஒரு விஷயம் பேசும் போது தேவை இருக்கோ இல்லையோ பழையை விஷயங்களை சொருகிடுவார்னு அனிதா சொன்னாங்க.

ஆரி பேசும் போது அனிதா சொன்னா மாதிரியே செஞ்சாரு. அனிதா மீடியால இருந்து வந்துருக்கறதால எல்லாத்தையும் ரொம்ப உன்னிப்பா கவனிச்சு, என்ன நடக்கப் போகுது, என்ன பேசப்போறாங்கனு கணிச்சு விளையாடறாங்கனு சொன்ன வரைக்கும் சரியான காரணம். அதுக்கப்புறம் சொன்னது தான் சொருகல். அனிதா கேப்டன்சில தூங்கறது, மைக் மாட்டறதெல்லாம் சரியா செஞ்சாங்க. ஆனா அதே மத்தவங்க கேப்டன்சில பாலோ பண்றதே இல்லைனு சொருகினாரு. ரெண்டு பேரும் ஒன்னுக்கொன்னு சளைச்சவங்களே இல்லை.

அடுத்தது கோழிப்பண்ணை டாஸ்க்ல நடந்த ரூல்ஸ் குழப்பம். ரூல்ஸை யாருமே பாலோ பண்ணலை. ஆனா ஆரி மத்தவங்க மேல பழி போட்டது பிரச்சினையாச்சு. "இந்த டாஸ்க்ல மட்டும் நேர்மையா விளையாடினதா" ரியோவுக்கு சர்டிபிகேட் கொடுத்தார் கமல் சார். போன வாரம் ரியோ பேர் சொல்றதுக்கு முன்னாடியே பேசி வாங்கி கட்டிகிட்டாரு ரியோ. இந்த வாரம் ரியோ, ரியோ னு அத்தனை தடவை சொல்லியும் மண்டையை மட்டும் ஆட்டிட்டு இருந்தாரு. என்ன ஸ்ட்ராட்டஜியோ.

முதல்ல ரூல்ஸை பிரேக் பண்ணினது ஆரி இல்லை. கேம் ஆரம்பிக்கும் போது யாருக்குமே புரியலை. ரியோ சொல்றதை கேக்கவும் இல்லை. ரியோவும் புரியறா மாதிரி சொல்லலை. அதுக்கப்புறம் எல்லாரும் ரூல்ஸை பிரேக் பண்ணினாங்க. ஆனா மத்தவங்க மட்டும் செஞ்சா மாதிரி ஆரி சொன்னது தவறு. அதனால சண்டையே வந்தது.

இந்த பிரச்சினை பத்தி பேசும் போது கமல் சார் இருக்காருங்கறதை மறந்துட்டு இவங்க சண்டை போட்டு இருந்தாங்க. கமல் சாரே பேச வாய்ப்பு கேக்க வேண்டியதாகிடுச்சு.

ரூல்ஸை மதிச்சு விளையாடுங்கனு சொல்லிட்டு ரியோ, ஆரி ரெண்டு பேரையும் சேவ் பண்ணிட்டு கிளம்பிட்டாரு. இன்னிக்கு என்னாகுதுனு பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>