ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில், விலங்கு, பறவைகள் மற்றும் ஊர்வன உட்பட 100 விதமான உயிரினங்களை உள்ளடக்கிய மிக பெரிய விலங்கியல் பூங்காவை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி கையில் எடுத்துள்ளார். இந்த விலங்கியல் பூங்காவானது 280 ஏக்கர் நிலப்பரப்பில், அவர்களின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை ஒட்டி அமைய உள்ளது.
இந்த விலங்கியல் பூங்காவிற்கு " பசுமை விலங்கியல் மறுவாழ்வு மற்றும் புணரமைப்பு கோட்டை" என்ற பெயரில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொது மக்களின் பார்வைக்கு விடப்படும். மேலும் கொரோனா தொற்றின் காராணமாகவே வேலைகள் தடைபட்டுள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து ஏற்கனவே ஒப்புதலை பெற்று விட்டதாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பரிமல் நத்வானி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய விலங்கியல் பூங்கா இணையதளத்தில் இந்த பூங்காவை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்தியாவின் காடுகள், தவளை வீடு, பூச்சுகளின் வாழ்க்கை, டிராகன் நிலம், கவர்ச்சிகரமான தீவு, குஜராத்தின் காடு வழி என பல தலைப்புகளில் கட்டமைப்புகள் உள்ளன. இந்த பூங்காவில் குறைக்கும் மான், சோம்பல் கரடி, சிறுத்தைகள், இந்திய ஓநாய் போன்ற உயிரினங்கள் ஆறு கூண்டுகளில் அடைக்கப்பட்டு மக்களை கவர, பார்வைக்கு வைக்கப்படும். மேலும் ஆப்ரிக்க சிங்கம், 12 தீக்கோழிகள், 20 ஒட்டகச்சிவிங்கி, 18 மங்கூஸ், 10 முதலைகள், 7 சிறுத்தைகள், ஆப்ரிக்க யானை, தவளை அரங்கில் சுமார் 200 வகை மற்றும் நீர்வாழ் அரங்கில் 350 விதமான மீன்கள் ஆகியவை பூங்காவில் அமைக்கப்பட உள்ளது.