வெப் சீரீஸிக்கு வரும் தமிழ் பிரபல ஹீரோ?

by Chandru, Dec 20, 2020, 15:35 PM IST

சினிமா கொரோனா ஊரடங்கால் முடங்கியதும் ஒடிடி தளங்கள் தலை தூக்கின. தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகின. சூர்யா நடித்த சூரரைப்போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி நடித்த டேனி, யோகிபாபு நடித்த காக்டெய்ல் என பல படங்கள் வெளியாகின. மேலும் மாஸ்டர், ஜெகமே தந்திரம் போன்ற படங்களும் ஒடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் அதை அப்பட நிறுவனங்கள் மறுத்தனர். தியேட்டரில் இந்த படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. சினிமாவும் ஒடிடி தளமும் பிரிக்கமுடியாத பந்தமாகி வருகிறது. பிரபல நடிகர், நடிகைகள் ஒடிடி தளத்தில் உருவாகும் வெப் சீரிஸ்களில் நடிக்க முன்வருகின்றனர். சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, நடிகர் ஜெய் போன்றவர்கள் ஏற்கனவே ஒடிடி தளத்தில் நடிக்க வந்து விட்டனர். தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதியும் வெப் சீரிஸில் நடிக்க உள்ளாராம். விஜய் சேதுபதி நடிக்கும் வெப் சீரிஸ் இந்தியில் உருவாக உள்ளது.

இந்தி பிரபல நடிகர் சாஹித்கபூரும் இதில் நடிக்க உள்ளார். இருவருமே முதன் முறையாக ஒடிடி தளத்தில் நடிக்க உள்ளனர். இதில் வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாராம். ஏற்கனவே அமீர்கான் நடிக்கும் இந்தி படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா கால கட்டத்துக்கு பிறகு கால்ஹீட் குழப்பம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார். தமிழில் விஜய் சேதுபதி லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் ஆகிய படங்களில் நடிப்பதுடன் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்