பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படமாக சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக அஷ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது.
விஜய்யின் மாஸ்டர் திரைக்கு வந்த 2வது வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.நாடு முழுவதும் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத ஆக்கிரமிப்பு சதவீதத்துடன் வெளியிடப்பட்ட படம் உண்மையில் ஒரு பெரிய சாதனை புரிந்திருக்கிறது.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பல்வேறு தடைகளைத் தாண்டி கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது. மாஸ்டர் படம். கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு தளர்வில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள், 50 சதவீத டிக்கெட் அனுமதி எனப் பல தடங்கல்களைத் தாண்டி படத்தை வெளியிடப்பட்டது.
விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியது. 8 மாதமாக தியேட்டர்கள் மூடிக் கிடந்தன.
மாஸ்டர் திரைப்படம் அனைத்து திரையரங்குகளில் வாத்தி ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது. சுமார் ஓராண்டுக் காலமாக எந்தவொரு படமும் வெளியாகாமல், வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இன்றைய மக்கள் வெள்ளம் திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவியது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான துறைகள் ஸ்தம்பித்தன.
துக்ளக் தர்பார் என்ற படத்தில் விஜய் சேதுபதி. பார்த்திபன் இணைந்து நடிக்கின்றனர். அரசியல் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். அடங்க மறு, ஆயோக்யா, சங்கத் தமிழன் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த சங்கத் தமிழன் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்கள் ஒப்புக்கொண்டார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம்.
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வில் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் படத்தை தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அப்போதும் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.