சமீபகாலமாக பான் இந்தியப் படங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ், கன்னடம் தெலுங்கு மொழியில் நடிக்கும் ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படங்களை இந்தியா முழுவதும் வெளியிடுகின்றனர். பிரபாஸ் நடித்த பாகுபலி அதுபோல் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் நடிக்கும் எல்லா படமும் பல மொழிகளில் உருவாகிறது. ராஜமவுலி அடுத்து இயக்கும் ஆர் ஆர் ஆ படம் யஷ் நடிக்கும் கே ஜி எஃப் 2 படம் போன்றவை பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. அந்த பட்டியலில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் பான் இந்தியா படமாக உருவானது எனலாம்.நம்மூர் ஹீரோக்கள் பாலிவுட்டை குறி வைத்திருப்பது போல் தெரிகிறது. பாலிவுட்டிலிருந்து ஜாக்கி ஷெராப், அஜய் தேவ்கன், சஞ்சய் தத், போன்றவர்கள் தென்னிந்தியப் படம் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி இந்தியில் நுழைகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அடுத்து அந்தாதுன் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்தி படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக கேத்ரினா கைப் நடிக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் இப்படம் ஏப்ரல் முதல் படப் பிடிப்பு நடக்க உள்ளது. ஆனால் இந்த படத்தில் இடைவேளையே கிடையாது, காரணம் முழு படமும் 90 நிமிடம் மட்டுமே திரையில் ஓடும் படமாக இது உருவாகிறது.