பிரபாஸ் வில்லனாக மாஸ்டர் பட வில்லன்? கே ஜி எ ஃ ப் இயக்குனர் திட்டம்

by Chandru, Jan 22, 2021, 19:04 PM IST

பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்‌ஷன் படமாக சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக அஷ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது. கே ஜி எஃப் போல் ஆக்‌ஷன் அதிரடி படம் ஒன்றில் பிரபாஸ் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேட்டு வந்தனர். ரசிகர்களின் எண்ணத்தை உடனே நிறைவேற்ற எண்ணிய பிரபாஸ் உடனடியாக கேஜிஎஃப் பட இயக்குனருடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தார்.

இப்படத்தை விரைவாக நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளார். இப்படத்துக்கு சலார் என பெயரிடப்பட்டிருக்கிறது.ஹொம்பாளே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் இப்படத்தின் படம் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நண்பரான யஷ் இப்பட பூஜையில் பங்கேற்க கர்நாடகாவிலிருந்து வந்திருந்தார். அவரை பிரபாஸ் வரவேற்றார். இருவரும் அருகருகே நிற்கும் புகைப்படத்தை போட்டி போட்டு படம் எடுத்தனர். அப்படங்கள் நெட்டில் வைரலானது.

விஜய் கிரகன்டுர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் இந்த மிகப்பெரிய சண்டை படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே, ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், ஒரு வன்முறை மிகுந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'சலார்' திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளது.கே ஜி எஃப் 2 படத்துக்கு அமைத்தது போன்ற வித்தியாசமான அரங்கை சலார் படத்துக்கு அமைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்கு பிரபாஸ் உடல் எடை கூடுவார் என்று கூறப்படுகிறது. இதுவரை ஸ்டைலாக அழகாக தோன்றி ஹீரோயிசம் செய்துக் கொண்டிருந்த பிரபாஸுக்கு இப்படத்தில் முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கி இருக்கிறாராம் இயக்குனர்.

இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை படக் குழு அணுகி உள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பை கண்டு அசந்து போன இயக்குனர் பிரசாந்த் நீல், சலார் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க பேசி வருகின்றார். விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருவதால் அவரது கால்ஷீட் கிடைப்பதில் பிரச்சனை உள்ளது. இதுபற்றி யோசித்து பதில் கூறுவதாக விஜய் சேதுபதி கூறி உள்ளார்.சீக்கிரமே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading பிரபாஸ் வில்லனாக மாஸ்டர் பட வில்லன்? கே ஜி எ ஃ ப் இயக்குனர் திட்டம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை