விஜய் மாஸ்டர் ரூ 200 கோடி வசூல்.. ரசிகர்கள் ஹேஷ் டேக் டிரெண்டிங்..

விஜய்யின் மாஸ்டர் திரைக்கு வந்த 2வது வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.நாடு முழுவதும் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத ஆக்கிரமிப்பு சதவீதத்துடன் வெளியிடப்பட்ட படம் உண்மையில் ஒரு பெரிய சாதனை புரிந்திருக்கிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ள முக்கிய பகுதிகள் லாக்டவுன் நிலை நீடிக்கிறது. எனவே மாஸ்டர் படங்களை அங்கு வெளியிட முடியவில்லை.படம் வெளியான 4 நாட்களுக்கு பிறகு மொத்தமாக 100 கோடி வசூலித்தாக திரையுலக வர்த்தக ஆய்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்தனர். சென்னையில் தொடர்ச்சியாக நான்கு நாளில் ரூ .1 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ்டர் சென்னையில் தனது வலுவான காலடி பதித்தது. இன்னும் நிறைந்த அரங்குடன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் திரையரங்குகளில் மாஸ்டர் சிறப்பாகச் செயல்படுகிறது என திரையுலக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக மாஸ்டர் வெளியாவதில் ஊசலாட்டம் நிலவி வந்தது. 50 சதவீத டிக்கெட் அனுமதி என்றதால் பட ரிலீஸை படக்குழு தள்ளிவைத்தது. ஆனாலும் தியேட்டர் அதிபர்கள், மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தமிழக முதல்வருக்கு 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கக் கோரிக்கை விடுத்தனர். அதைப் பரிசீலித்து 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கியது அரசு. ஆனால் அதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. 100 சதவீத டிக்கெட் அனுமதித்தால் கொரோனா வேகமாகப் பரவும் என்று அறிவுறுத்தியதுடன் அரசு 100 சதவீத முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றனர்.

மத்திய அரசும் 100 சதவீத டிக்கெட் கூடாது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.மேலும் 100 சதவீத டிக்கெட் அனுமதியை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் இது குறித்து அரசிடம் கருத்துக் கேட்டது. பலமுனைகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் 100 சதவீத அனுமதி உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கியது. மாஸ்டர் படம் அறிவித்தபடி 13ம் தேதி அதிக தியேட்டர்களில் வெளியாகி வசூலை ஈட்டி வருவதுடன், ஹிட் படமாகவும் அமைந்துள்ளது. தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்தபடி மாஸ்டர் படம் ரசிகர்களை தியேட்டருக்கு திரள வைத்திருக்கிறது. இந்நிலையில் விஜய் மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி எண்டெமால்ஷைன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் ரீஜ் கூறுகையில், "மாஸ்டர் முழு செயல்திறன் மற்றும் சக்தி வாய்ந்த கதை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை எதிரொலிக்கிறது.

கொரோனா கால ஊரடங்கு தளர்வில் தமிழில் வெளியான முதல் பெரிய படம் “மாஸ்டர்” ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்தகைய சூடான படத்துக்கான உரிமைகளைப் பெற்றதில் நாங்கள் நம்பமுடியாத பெருமை அடைகிறோம்; இந்தி பார்வையாளர்களை ஈர்க்க இந்த படத்தின் ஈர்ப்பு மந்திரத்தை மீண்டும் உருவாக்க நாங்கள் எதிர் நோக்கி இருக்கிறோம், ”என்று ரீஜ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மாஸ்டர் படம் ஏற்கனவே தமிழ். தவிரத் தெலுங்கு, இந்தி படங்களிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனாலும் மீண்டும் இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தி முன்னணி நடிகர்ஹிருத்திக் ரோஷன் நடிப்பார் என்று தெரிகிறது.

தமிழில் கடந்த 13ம் தேதி மாஸ்டர் வெளியாகி 2 வது வாரத்தைத் தொடரும் நிலையில் உலக அளவில் ரூ 200 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல், சர்கார், பிகில் படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டு #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக் உருவாக்கி நெட்டில் தெறிக்கவிட்டு வருகின்றனர். இதேபோல் ரசிகர்கள் கூட்டம் படத்துக்கு திரளும் நிலையில் விரைவில் ரூ 300 கோடி வசூல் சாதனை எட்டும் என்று கூறப்படுகிறது. தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கும் மாஸ்டர் படக் குழுவுக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ஒடிடி தளத்தால் திரை அரங்குகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டர்களை மூடும் அபாயத்திலிருந்து மீட்டிருக்கிறது என்கின்றனர். ரசிகர்களும் தியேட்டர் அனுபவம்போல் வேறு தளத்தில் படம் பார்க்கும் அனுபவம் கிடைக்காது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :