Wednesday, Jun 23, 2021

நடிகை கங்கனாவுக்கு மீண்டும் போலீஸ் சம்மன்.. சிறையில் அடைக்க திட்டம் என குற்றச்சாட்டு..

by Chandru Jan 22, 2021, 14:37 PM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் தற்கொலையின் போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவமானப்படுத்தியதால் தான் சுஷாந்த் சிங் இப்படியொரு முடிவு எடுத்தார் என்று சர்ச்சையைக் கிளப்பியது முதல் பல்வேறு விவகாரங்களில் கருத்து தெரிவித்து சர்ச்சை நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத்.மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது சுஷாந்த் வழக்கு தொடர்பாகக் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேவை நேரடியாகத் தாக்கி பேசினார். பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர்போல் மும்பை உள்ளது என்றார். இதனால் சிவசேனா கட்சி தொண்டர்கள் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். பிறகு முஸ்லீம்களுக்கு எதிராக மத உணர்வைத் தூண்டி கலவரம் விளைவிப்பதுபோல் கங்கனா மெசேஜ் வெளியிடுவதாக கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதுகுறித்து கோர்ட்டை அணுகி இடைக்கால உத்தரவை கங்கனா பெற்றார். முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார். கடந்த அக்டோபரில், கங்கனாவிடம் விசாரணை நடத்தி டிசம்பர் 5 க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காவல் துறை அறிக்கை தாக்கல் செய்யத் தவறியதால் ஜனவரி 5 வரை அவகாசம் வழங்கப் பட்டது, ஆனால் அது மீண்டும் காலக் கெடுவைத் தவறவிட்டது. பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் காவல்துறையினருக்கு அறிக்கை தாக்கல் செய்யக் கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக நீதிமன்றம் கூறியது, இந்த வழக்கில் புகார் அளித்த வழக்கறிஞர் அலி காஷிஃப் கான் தேஷ்முக் கூறினார். ரனவுத்தின் சகோதரி ரங்கோலி சாண்டல் ஏப்ரல் மாதம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைத்து ட்விட்டரில் ஆட்சேபகரமான செய்தியை வெளியிட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவரது கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவித்தது.

இந்த வழக்கு தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் பாந்த்ரா காவல் நிலையத்தில் ஆஜாராகினர். ஏற்கனவே மும்பை காவல் துறை இதற்கு முன் மூன்று முறை கங்கனா ரனவத் மற்றும் ரங்கோலிக்கு சம்மன் அனுப்பியிருந்தது, ஆனால் அவர் ஆஜராகவில்லை. போலீஸ் நிலையத்துக்குச் செல்லும் முன் எஃப்.ஐ.ஆர் மற்றும் நடைமுறைக்குப் பதிலளித்த கங்கனா ரனாவத் வீடியோவில் பேசி தகவல் பகிர்ந்தார். அவர் கூறியதாவது: நான் தேசத்தின் நலனுக்காகப் பேச ஆரம்பித்ததிலிருந்து, நான் நடத்தப்படும் விதமும் எனக்கு மென்ட்டல் மற்றும் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்படும் விதமும், முழு நாடும் பார்க்கிறது. எனது வீடு இடிக் கப்பட்டது. விவசாயி களின் நலனுக்காக நான் பேசியதால் தினமும் என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சிரித்ததற்காகக் கூட என் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் டாக்டர்கள் சித்திரவதை செய்யப்படுவதை எதிர்த்து என் சகோதரி ரங்கோலி எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, எனது பெயரும் அதில் இணைக்கப்பட்டது. என்ன காரணத்திற்காக என்று எனக்குத் தெரியாவிட்டாலும், காவல் நிலையத்தில் வந்து பதில் அளிக்கும்படி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாரிடமும் வெளிப்படுத்தவோ அல்லது நான் எதிர் கொள்ளும் சித்திரவதை பற்றிப் பேசவோ கூடாது என்று நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டு அவர்களின் குரல்கள் அமைதியாக இருந்த இடைக் காலத்திற்கு நாம் திரும்பிவிட்டோமா?. இந்த சூழ்நிலையை வேடிக்கை பார்த்து மகிழ்கிற மக்களே, எங்கள் 1,000 ஆண்டுக் கால அடிமைத்தனத்தில் நாம் சிந்திய இரத்தம், கண்ணீர், அமைதியாக இருக்கும் தேசிய வாதக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டால் மீண்டும் அது நிகழும் என்றார்.இந்நிலையில் இந்தி படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அந்தேரி கோர்ட்டில் நடிகை கங்கனா மீதுமான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார். தன்னைப்பற்றி அவதூறாகப் பேசியதாக அவர் தாக்கல் செய்த கிரிமனல் வழக்கில் நடிகை கங்கனா ரனவுததுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த வழக்கை விசாரிக்கும் ஜுஹு போலீஸ் அதிகாரிகள் முன் ஜனவரி 22 ஆம் தேதி இன்று) ஆஜராகுமாறு கங்கனாவை கேட்டுள்ளனர்.கங்கனாவுக்கு எதிராக அக்தர் தாக்கல் செய்த அவதூறு வழக்கை விசாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் ஜூஹு போலீசாரிடம் கோரியது.

ஆனால் கங்கனா விசாரணைக்கு செல்வாரா என்பது உறுதியாகவில்லை.இந்த சம்மன் குறித்து கங்கனா டிவிட்டரில் வெளியிட்ட மெசெஜில், “இன்று எனக்கு இன்னும் ஒரு சம்மன் அழைப்பு. அனைத்து ஓநாய்களும் ஒன்றாக வாருங்கள்… என்னைச் சிறையில் அடைக்க… என்னைச் சித்திரவதை செய்து 500 வழக்குகளுடன் என்னைச் சுவருக்குள் தள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.பல செய்தி சேனல்களில் பேட்டி அளித்த கங்கனா ரனாவத் தன்னைப்பற்றி அவதூறாகத் தகவல் வெளியிட்டதாக அவர் மீது வழக்கு செய்திருந்தார் அக்தர். ஒரு நேர்காணலின் போது சுஷாந்த் சிங் ராஜ் புத் வழக்கில் தனது பெயரைத் தேவையில்லாமல் இழுத்ததாக அவர் கூறியிருந்தார். பல்வேறு ஆன்லைன் தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள வீடியோவின் அடிப்படையில் கங்கனா மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் கேட்டார்.

You'r reading நடிகை கங்கனாவுக்கு மீண்டும் போலீஸ் சம்மன்.. சிறையில் அடைக்க திட்டம் என குற்றச்சாட்டு.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை