பாலா மற்றும் ஷிவானிக்கு இடையே மோதல்.. ஆரியை மிரட்டும் அனிதா..நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

Advertisement

வெத்தலையை போட்டேண்டி சக்தி கொஞ்சமேறுதடி பாட்டுக்கு அதிசயமா பாலா முன்னாடி வந்து ஆடிட்டு இருந்தான். ஏன்னா அவர் கேப்டனாம். அடேய் அடுத்தவங்க கேப்டன்சில இழுத்து போர்த்திட்டு தூங்கறது, உன்னோட கேப்டன்சில மட்டும் ரூல்ஸை கரெக்டா பாலோ செய்யறது நல்லாவா இருக்கு. ஆனா இதை புது கேப்டன்கள் பலரும் செஞ்சுருக்காங்க. மோசமான பழக்கம்.

சனிப்பெயர்ச்சிக்கு இன்னும் நாள் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டுல ரெண்டு பேருக்கு நேத்து சனிப்பெயர்ச்சி நடந்துருக்கு. சனிப்பெயர்ச்சி மட்டும் இல்ல எல்லா கிரகப்பெயர்ச்சியும் நடந்துருக்கு. கூடவே சந்திராஷ்டமம், ராகு காலம், எமக்ச்ண்டம் எல்லாம் ஒன்னா வந்துருக்கு. ஆனா அது தெரியாம வாயை கொடுத்து வாங்கி கட்டிட்டாங்க. முதல்ல பாலா அப்புறம் ஆரி.

ஆஜித்தோட சேர்ந்து ஷிவானி பதுக்கி வச்சுருந்த சாக்லேட்டை எடுத்துட்டு இருந்தார் பாலா. அப்ப ஷிவானி "வீல்னு" ஜாலியா கத்தினாங்க. அப்ப கிச்சன்ல இருந்த அனிதா, "எனக்கு மத்தவங்க கத்தினா மயக்கம் வந்துடும்னு" சொல்லவும், ஷிவானி அதை கண்டுக்கலை. "அதுக்கு நான் பண்றதுனு" கேட்டது அனிதாவுக்கு ஹர்ட் ஆகிடுச்சு. பாலாவை கூப்பிட்டு புகார் செய்யறாங்க. இப்படி ஒரு போபியா இருக்கா என்ன? அப்படியே இருந்தாலும், அது ஷிவானிக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை. கொஞ்சம் பொறுமையா, எடுத்துச் சொல்லிருந்தா ஷிவானியும் கேட்ருக்க வாய்ப்பிருக்கு. ஷிவானி கத்தினது சும்மா விளையாட்டுக்கு. அதுக்கு கிச்சன்ல இருந்தே சொன்னதை ஷிவானியும் சீரியஸ்ஸா எடுத்துக்கலை. இதை மறுபடியும் எடுத்துட்டு போய் பாலா கிட்ட புகார் செஞ்சு, இதை ஒரு இஷ்யூ ஆக்கினது தேவையே இல்லாதது. அனிதா இந்த விஷயத்தை பாலா கிட்ட பேசும் போது ஷிவானி பக்கத்துல தான் இருக்காங்க போலருக்கு. அனிதாவை உக்கார வச்சுட்டே ரெண்டு பெட்டு தள்ளி இருக்கற ஷிவானிகிட்ட போய், அனிதாவை பத்தி பேசினது பாலா செஞ்ச தப்பு. உடனே சாரி சொன்ன ஷிவானி அதோட நிறுத்தலை. ஆக்சுவலா அவங்க வேணும்னே செய்யலை. ஆனா அதை சரியா சொல்லாம, ஆர்கியுமெண்டா கொண்டு போய்ட்டாங்க. பாலாவோட கேப்டன்சி பத்தி பேசும் போது அனிதா இதை சொல்லுவாங்கனு தோணுது.

அரிசியும், பருப்பும் ஒரே குக்கர்ல வேக வைக்கனுமா, இல்ல தனித்தனியா செய்யனுமானு கேப்பி கிட்ட கேட்டாங்க அனிதா. அர்ச்சனா எப்படி செய்வாங்கனு கேப்பி கிட்ட கேக்கறாங்க. அவங்க எப்படி செஞ்சுருந்தா என்ன, அனிதாவுக்கு சமையல் தெரியும். இவங்க ஸ்டைல்ல செஞ்சுட்டு போகலாம். ஆனா இதெல்லாம் பர்ப்பஸா செஞ்சதா இருக்கு.

அடுத்து இந்த வார நாமினேஷன். நெகட்டிவிட்டி, ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் & கான்பிடன்ஸை உடைக்கறாங்க, காண்ட்ரிப்யூஷன் இல்லை, இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித், கேப்பி.

அடுத்து பால் கணக்குல ஒரு பஞ்சாயத்து வந்தது. இருக்கற பாலை ஒரு வாரம் முழுவதும் யூஸ் பண்றதுக்கு, எப்படி பிரிக்கறதுனு பாலாவுக்கு தெரியலை. அதை பத்தி கேப்பி கிட்ட கேக்கறான், அவங்களுக்கும் சரியா தெரியலை. அப்ப சோம், ரியோலாம் ஹாட் சாக்லேட் மில்க் ஷேக் கேக்கவும், அங்க இருந்த ஷிவானி தானே செய்யறதா உள்ள போறாங்க. ஒரு பாக்கெட் பாலை உடைச்சு எத்தனை கப்பு வருதுனு பாருனு, கேப்பி சொல்லி அனுப்பறாங்க.

கிச்சன்ல வந்து அந்த வேலையை செஞ்சுட்டு இருக்கும் போது, ஷிவானியும் பாலாவும் பேச ஆரம்பிச்சது ஒரு பெரிய விவாதமா மாறிடுது. எதுக்குடா சண்டை போட்டுக்கறிங்கனு ஆயாசமே வந்துடுச்சு. புறாவுக்கு போரா என்பது போல பால் கணக்கு பார்க்கறதுக்கு சண்டை போடறாங்க. ஷிவானி எதுக்கு டென்சன் ஆச்சுனே தெரியல.

இதுல இன்னொரு கூத்து என்னன்னா, சமைக்க தெரிஞ்ச அனிதாவுக்கு காப்பி, டீ போடத் தெரியாதாம். அதனால பால் கணக்கு தெரியாதாம். என்னய்யா பித்தலாட்டமா இருக்கு. அதாவது காப்பி, டீ போடத் தெரியும்னு சொன்னா காலைல எல்லாருக்கும் முன்னாடி எழுந்து காப்பி, டீ போட்டுத் தரணும். அதுல இருந்து தப்பிக்க எனக்கு காப்பி, டீயே போடத் தெரியாதுனு சொல்லிட்டுருக்கு அம்மணி. என்னே ஒரு தொலைநோக்கு பார்வை.

அடுத்து ஒரு டாஸ்க். டாஸ்க் பேர் "மாட்னியா". ஆக்சுவலா இது கோர்த்து விடற டாஸ்க். போன வாரம் கவுன்சிலிங்லாம் கொடுத்து மனசை தேத்தினது எதுக்காக. இந்த மாதிரி கோக்குமாக்கா டாஸ்க் கொடுக்கத்தான். விளையாட்டு என்னமோ கையை தட்டி விடற சின்னப் பசங்க விளையாட்டு தான். ஆனா வில்லங்கம் சீட்டு வடிவில் இருந்தது. பவுல்ல இருக்கற சீட்ல என்ன வார்த்தை எழுதிருக்கோ, அந்த வார்த்தை சம்பந்தப்படுத்தி என்ன கேள்வி வேணும்னாலும் கேக்கலாம். " என்ன கேள்வி வேணும்னாலும்" என்பது தான் இங்க குறியீடு.

ரம்யா கிட்ட யாரை நாமினேட் பண்ணுவீங்கனு கேள்வி கேட்ட ஆரி பேரை சொல்லி ஷாக் கொடுத்தாங்க. ஆக்சுவலா ஆரி மேல கொல காண்டுல இருக்காங்க ரம்யா. அதுக்கு சில காரணங்கள் / நிகழ்வுகள் இருக்கு. அதை தனியா டிஸ்கஸ் பண்ணுவோம்.

அடுத்து பாலா கேள்வி கேக்க வந்தாரு. "வேக் அப் டான்ஸ்னு ஒரு வார்த்தை" வந்தது. அதுக்கு ஆரிகிட்ட ஒரு கேள்வி கேட்டான் பாருங்க. 15வது வாரம் பைனல் அன்னிக்கு காலைல பாட்டு போடறாங்க. அப்ப உங்க கூட யார் ஆடுவாங்கனு" கேட்ட போது, ரியோ அப்படியே ஷாக் ஆகிட்டான். அய்யா, உண்மையிலேயே இவன் தான்யா நரினு பிக்பாஸ் கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. இந்த கேள்வி ஆரிக்கு. பைனல்ல அவரோட இருக்கனும்னு ஆசைப்பட்ட லிஸ்ட் ரம்யா, ஷிவானி, கேப்பி. ரைட்டு.

அடுத்த கேள்வி ரம்யாவுக்கு. "நியாயமற்றது" இந்த வீட்ல யாரோட பதில் நியாயமற்றதுனு நினைக்கறிங்கனுகேட்டதுக்கு ரியோவையும், ஆரியையும் சொன்னாங்க. ஆரி பேசறது பூராவுமே நியாயமற்றதுனு சொல்லிட்டாங்க.

அடுத்த கேள்வி பாலா டூ அனிதா. "ஈடுபாடு". இந்த வீட்ல தன்னை மட்டும் முன்னிலைப்படுத்த ஈடுபாட்டோடு இருப்பவர் யார்? என்பது கேள்வி. இதை கொஞ்சம் சுத்தி வளைச்சு கேட்டுட்டு, கேள்வி புரிஞ்சுதானு வேற கேட்டான். அனிதாவும் ஆரியை சொன்னாங்க. கமல் சார் எபிசோட்ல ஆரியை நரினு சொல்லி அனிதா சொன்ன ரீசன்ஸ் பக்காவா ஆரிக்கு பொருந்தும். ஆனா அதை ஆரி விரும்பலை போலருக்கு. அதுலேர்ந்து அனிதாவை டார்கெட் பண்றதா அனிதாவே நினைக்கறாங்க. பீல் பண்றாங்க. ஆக்சுவலா பாலா கேட்ட கேள்வி ஆரியை பத்தி தான். ஆனா அதுக்கு அனிதா சொன்ன பதில் பொருந்தலை. அதான் உண்மை. தேவையே இல்லேன்னாலும் சில பாயிண்ட்ஸை சொருகிருவாருனு அனிதா சொன்னது சரியான விஷயம் தான். ஆனா அதை கமல் சார் முன்னாடி சொன்னது தான் ஆரியோட பிரச்சினை.

ஆரி, அனிதா ரெண்டு பேருமே பழிவாங்கும் குணம் கொண்டவர்கள். இரண்டு பேருமே பழசை மறக்காதவங்க. இரண்டு பேருமே தன்னோட தவறை ஒத்துக்காதவங்க. எதிராளி ஒரு அடி அடிச்சுட்டா, அவங்களை அடிச்சு கீழ சாய்க்கிற வரைக்கும் ஓய மாட்டாங்க. அப்படி இருக்கும் போது இவங்க இரண்டு பேருக்கும் நடுவுல உரசல் ஆரம்பிச்சது இந்த மொமண்ட்ல தான்.

அனிதா பதில் சொல்லும் போது " என் பேரை சொல்லனும்னே ரியோ கிட்ட கேள்வி கேட்டா மாதிரி இருந்தது"னு சொன்னது பிரச்சினை ஆகிடுச்சு. "நீங்க டி ஆர் பி டேலண்ட்" டி ஆர் பிக்காக எவ்வளவு பேசுவீங்கனு" எனக்கு தெரியாதா என்று ஆரியும் அந்த உரசலில் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றினார்.

அடுத்து பாலா டூ ஆஜித். இந்த வீட்ல யாரோட கேம் பிடிக்கலைனு கேட்ட கேள்விக்கும் ஆரி தான் முதல் சாய்ஸ். எல்லாருமே தப்பு செய்யறோம், ஆனா மத்தவங்க தவறை சுட்டிக் காட்டறதை மட்டுமே செய்யறாருனு ஆஜித் சொன்னாரு.

அடுத்து பாலா டூ ஷிவானி. "இன்புளையன்ஸ்" " இந்த வீட்ல குட் இன்புலையன்ஸ், பேட் இன்புளையன்ஸ், யாரு, யாரை செய்யறாங்கனு சொல்லனும்" பாலா கேட்டதெல்லாம் விவகாரமான கேள்விகள் தான். ரம்யா-ஆஜித்தை குட் இன்புளையன்ஸ்க்கு சொன்னாங்க, பேட் இன்புளையன்ஸா ஆரி பேரை சொன்னவங்க, அவர் ஆடியன்சை இன்புளையன்ஸ் செய்யறாருனு சொன்னது தைரியமான பதில்.

அடுத்து ஷிவானி டூ ஆரி. "டீமோட்டிவேடட்.", இந்த வீட்ல யார் டீமோட்டிவேட்டா இருக்காங்கனு கேட்டதுக்கு ஆரி சொன்ன பதில் தான் பெரிய சர்ச்சையா வெடிச்சது.

நான் மேல சொன்னா மாதிரி பழி வாங்கற குணம் ஆரிக்கும் இருக்குங்கற உதாரணம் தான் ஆரி பேசினது. நம்ம எல்லாருக்குமே மூட் அவுட் இருக்கும், மூட் ஸ்விங் இருக்கும். சில நேரங்கள்ல ரொம்ப டவுனா இருப்போம். அப்ப கண்டதெல்லாம் தோணும். அப்படி அனிதா ரொம்ப டவுனான ஒரு சமயத்துல அர்ச்சனா கிட்ட பேசி அழுதுருக்காங்க. அனிதா பிக்பாஸ் வீட்டுக்கு போறதை அவர் கணவரை தவிர யாரும் விரும்பலை. இங்க என்ன தான் கேம் கான்ஷியஸா விளையாடினாலும் இதோட எதிர்வினை வீட்ல எப்படி இருக்கும்னு அவங்களுக்கு ஒரு சந்தேகம். ரொம்ப அட்வான்ஸ்டா திங்க் பண்றது அனிதாவுக்கே உரித்தான குணம். எதையும் ரொம்ப டீப்பா திங்க் பண்றது. அதோட விளைவு தான் இந்த புலம்பல். அர்ச்சனாவும், அனிதாவும் பேசின தனிப்பட்ட உரையாடல் இது. (இது ஆரி சொன்ன வெர்சன்)

டீமோட்டிவேட் ஆனவங்க பத்தின கேள்விக்கு ஆரி இந்த விஷயத்தை எடுத்து சொல்றாரு. அப்படி சொல்லிட்டு இருக்கும் போது அனிதாவும் சாதாரணமா தான் கேட்டுட்டு இருந்தாங்க. அனிதாவோட கணவர் பெயரை சொல்லி ஆரி பேச முற்படும் போது தான் அனிதாவோடம் முகம் மாறுது, உடனடியா பதறி ஆரியை தடுக்கறாங்க. அனிதா சொன்ன விஷயம் ரொம்ப சிம்பிள் " என்னை பத்தி எதுவேணும்னாலும் பேசுங்க. நான் கேட்டுக்குறேன். ஏன்னா நான் தான் இங்க விளையாட வந்துருக்கேன். குடும்பத்தை இழுக்காதீங்கனு கமல் சாரே சொல்லிருக்காரு. தயவுசெய்து என் கணவர் பேரை இழுத்து பேசாதீங்கனு " அவங்க சொன்னது நியாயமானதும் கூட. ஏன்னா அனிதாவோட கணவர் பெயர் சொல்லப்படும் போது அதை தடுக்கற உரிமை அவங்களுக்கு இருக்கு.

அதே மாதிரி தன்னுடைய பேச்சுக்கு கண்டனம் எழும் போது, "அப்படியா, சாரி" னு சொல்லி பேச்சை மாத்த ஆரிக்கு எல்லா வாய்ப்பும் இருந்தது. ஆனா " நீங்க சொன்னதை தான் நான் சொல்றேன்னு" பிடிவாதமா பேச ஆரம்பிச்சது தவறான விஷயம்.. "என் புருஷனை பத்தி பேசாதீங்க" னு அனிதா சொன்ன போது "நீங்க மட்டும் ஏன் பேசறிங்கனு" கேட்டது ரொம்பவும் அடவடியான செயல். இந்த கேள்வியை ஆரி கேட்ருக்க வேண்டியதில்லை. ஆரியும் திரும்ப திரும்ப பேசவும் அனிதா ரொம்பவே உக்கிரமா ஆகிட்டாங்க. "என் ஹஸ்பண்ட் பத்தி, அம்மா, அப்பா பத்தி பேசாதீங்க"னு திரும்ப திரும்ப அனிதா சொல்லும் போது ஆரியும் தொடர்ந்து இதே கேள்வியை கேட்டுட்டு இருந்தார். " அப்ப இனிமே நீங்களும் பேசாதீங்கனு" ஆரி சொன்னதுல இன்னும் டென்சனாகிட்டாங்க அனிதா. "அவர் உங்க வீட்டுக்காரர் தான், யார் இல்லேன்னு சொன்னா" னு கேட்டதை எல்லாம் எந்த கணக்குல சேர்க்கறதுனு தெரியல. ஹவுஸ்மேட்ஸ் சொல்லும் போதும் அதையே தான்சொல்லிட்டு இருந்தாரு. கடைசில எல்லாரும் வலியுறுத்தி சொன்னதுக்கு அப்புறம் தான் அதை விட்டாரு ஆரி.

அனிதாவோட கணவர் பத்தி ஆரி தவறா எதுவும் பேசலை. அவரை பத்தி நல்லதாவே சொல்லப் போறாருனு வச்சுப்

போம். ஆனா சம்பந்தபட்டவங்க அதுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் போது அவர் நிறுத்திருக்கனும். அனிதாவை பார்த்து நீங்க ஏன் பேசினீங்கனு கேட்டது நியாயமே இல்லை.

போன வாரத்துல அனிதாவை பக்கத்துல வச்சுட்டு அவர் கணவரை பத்தி அர்ச்சனா பேசினாங்களே? அது மட்டும் என்னவாம். ஏன் அப்ப அனிதா தடுக்கலைனு நிறைய கேள்விகள் வருது. நேத்து விவாதம் நடந்துட்டு இருக்கும் போதே அனிதா ஒரு வார்த்தை சொல்றாங்க. "சீரியஸான விஷயத்துல என் கணவர் பெயரை இழுக்காதீங்க" னு சொன்னது நினைவிருக்கலாம்.

அனிதாவை குறை சொல்லியும், இப்படி ஒரு பொண்ணு கூட வாழும் தெய்வம்னு அனிதாவோட கணவரை உயர்த்தி வச்சு தான் அர்ச்சனா பேசினாங்க. அதுவும் அனிதாவோட முழு பர்மிஷனோட. அங்க அனிதாவை மட்டம் தட்டி தான் பேசினாங்க. அதுவும் இல்லாம அது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக சொல்லப்பட்டது. அதையும் இதையும் ஒப்பீடு செய்ய முடியாது.

அனிதா அப்ஜக்சன் சொல்லும் போது ஆரி நிறுத்திருக்கனும். அதை மீறி பேச ஆரி முயற்சி செஞ்சது தவறு தான்.

இந்த பிரச்சினைக்கு மூல காரணம் இருவரின்மனதில் இருந்த பழிவாங்கும் வெறி. . இந்த பிரச்சினை இதோட முடியாது. ரெண்டு பேருமே இதை மறக்க மாட்டாங்க.

அடுத்ததா ஷிவானியை பத்தி பேசும் போதும் ஆரிக்கு ஒரு பஞ்சாயத்து வந்தது. விட்டுக் கொடுத்து விளையாடறது யாருனு கேட்ட போது ஷிவானி பேரை சொன்னாரு. அது வரைக்கும் சரியா இருந்தது. பாலா தான் டைட்டில் வின் பண்ணனும்னு ஷிவானி ஆசைப்படறாங்கனு ஆரி சொன்னதை ஷிவானியும் மறுக்கறாங்க. இதை பத்தி பேசும் போது "நீங்க சொன்னதை தான் நான் சொன்னேன்னு" அதே டயலாக் சொன்னாரு. அதாவது டெலிபோன் டாஸ்க்ல ஷிவானி கிட்ட பேசும் போது, பைனலுக்கு யார் வருவாங்கனு சொன்ன ஷிவானி, டைட்டில் யார் ஜெயிப்பாங்கனு தெரியாதுனு சொல்லிருக்காங்க. அதுல இருந்து எடுத்துச் சொல்லிருக்காரு.

ஆரி பேசும் போது சில வார்த்தைகளை முழுங்கிடறாரு. அவர் சொல்ல வரது முழுசா புரியாது. ஒரு வாக்கியம் பேசிட்டு இருக்கும் போதே அதை முடிக்காம அடுத்த வாக்கியத்துக்கு தாவிடுவாரு. இதை நீங்க உன்னிப்பா கவனிச்சு பார்த்தா தெரியும். அதுவே அவருக்கு சில பிரச்சினைகளை தருது.

ஆரியோட பதிலுக்கு அப்புறம் ஷிவானி கேட்ட முதல் கேள்வி "இது உங்களுடைய தோணல் தானே" புரிதல் தானேங்கற அர்த்தத்துல ஷிவானி கேட்டாங்க. இங்கேயே ஆமாம்னு சொல்லிருந்தா மேட்டர் முடிஞ்சுது. ஆனா "இல்லைனு" சொல்லிட்டு ஆரம்பிச்சு பழைய கதையை பேசி, அன்னிக்கு காலைல 6 மணினு ஆரம்பிச்சு, ப்பா.... முடியல. கடைசில எனக்கு தோணின விஷயம்னு முடிச்சாரு. இதைதாம்பா அந்த பொண்ணு முதல்லேயே கேட்டுது.

இந்த டாஸ்க் முடிஞ்சதுக்கு அப்புறம் சோம் வந்து ஆரியை பாராட்டறாரு. பாத்ரூம் ஏரியால அவங்க என்ன பேசினாங்கனு தெளிவா கேக்கலை. அதே மாதிரி ஷிவானி நல்லா கேள்விகள் கேட்டதா ஆரி பாராட்டறாரு.

அதுக்கப்புறம் அனிதா, ரம்யா, ஆஜித், பாலா எல்லாரை பத்தியும் சோம், ரியோ கிட்ட பேசறாரு.

ஆரியை பொறுத்தவரைக்கும் தான் ஏதாவது தப்பு பண்ணிட்டோம்னு சின்னதா சந்தேகம் வந்தாலும் யார்கிட்டயாவது போய் பேசறது வழக்கம். இதை பல வாரங்களா பார்த்துருக்கேன். அப்படியே கான்வர்சேஷனை வளர்த்து நடந்த பிரச்சினையை பத்தின அவங்க கருத்தை கேட்டுப்பாரு. அதே சமயத்துல தன்னையும் டிபெண்ட் பண்ணிப்பாரு. சாம் கூட அவருக்கு பிரச்சினை ஆன போது அனிதாவும், சனமும் தான் அவர் கூட இருந்தாங்க. ரம்யா & சாம் கூட ஒரு பிரச்சினை வந்த போது ரியோ, ரமேஷ் கிட்ட உக்காந்து ரம்யாவை பத்தி பேசினது நினைவிருக்கலாம். இப்ப அனிதா கூட பிரச்சினை, சோம் & ரியோ கிட்ட பேசறாரு. அவர் பேசும் போது அனிதா vs ரியோ பிரச்சினையை எடுத்து பேசி அதுல நியாயம் ரியோ பக்கம் தான் இருக்குனு சொல்லி, ரியோவோட ட்ரஸ்டை வாங்கிருவாரு. இதையே தான் ரமேஷ் கிட்ட பண்ணினாரு. இதெல்லாம் ஒரு தொடர் நிகழ்வுகள். எத்தனை பேருக்கு புரியும்னு தெரியலை.

வீட்டுக்குள்ள ரம்யா கிட்ட அழுதுட்டே பேசறாங்க அனிதா. அப்ப அனிதாவோட வெர்சன் ஒன்னு சொல்றாங்க. அனிதா வீட்ல பிக்பாஸுக்கு அனுப்பும் போது, யாரையும் காயப்படுத்த்தாம, சண்டை போடாம இருக்கனும்னு சொல்லிருக்காங்க. ஆனா அனிதா அவங்க சொன்னா மாதிரி நடந்துக்கலை. அதை சொல்லி வீட்டு ஞாபகத்துல பேசினதா அனிதாவோட ஸ்டேட்மெண்ட்.

கேமரா முன்னாடி நின்னு மன்னிப்பு கேட்டுட்டு இருப்பாருனு ரம்யா சொன்னதை நைட் 2.20 க்கு செஞ்சாரு ஆரி.

வீடு கிறிஸ்மஸ் நாளுக்காக அட்டகாசமா டெகரேஷன் பண்ணிருந்தாங்க.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>