ஆண்டவர் தரிசனம்.. பருப்பு விவகாரம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

Advertisement

ஆண்டவர் தினம். வழக்கம் போல கைத்தறி நெசவாளர்கள் நெய்த துணியில் கோட் சூட் அணிந்து பேஷனாக வந்தார். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்.

ஒரு நாள் நிகழ்வுனு சொல்லிட்டு ரெண்டு நாளை காட்டினாங்க. சனிக்கிழமையும் சேர்த்து வந்துதானு தெரியல. சொல்லிக் கொள்ளும் படி எந்த நிகழ்வும் இல்லை. காலை உணவு உப்புமா எடுத்து சாப்பிட வந்தார் சோம். உப்புமா சாப்பிடுவதே ஒரு தண்டனை தான். அதிலும் அனிதா செய்த உப்புமாவை சாப்பிடுவது குறித்து கருடபுராணத்தில் இருக்கும் என்றே நினைக்கிறேன். வேகாத உப்புமாவை சோமின் தட்டில் போட்டு கொடுத்தது கேப்பி. அதை அவர் சாப்பிட்டு பார்க்கும் வரை எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். வேகாத உப்புமா இல்லாம இன்னும் தனியாக்ச் இன்னொரு உப்புமாவும் செய்திருக்கிறார் அனிதா. முதலிலேயே அதை போட்டுக் கொடுத்திருக்கலாம். வேகாத உப்புமாவை பற்றி சோம் புகார் சொன்ன பிறகு அதே தட்டில் வேறு உப்புமாவையும் போட்டுக் கொடுத்தார் அனிதா.

கிச்சன் மேடை மிகவும் அழுக்காக வைத்து இருக்கிறார் என்று அனிதாவின் மீது புகார் சொல்லிக் கொண்டிருந்தார் கேப்பி.

மீண்டும் ஆண்டவர் வருகை. மறைந்த எழுத்தாளார் தொ.பரமசிவம் அவர்களை பற்றி நினைவு கூர்ந்தார்.

அகம் டிவி வழியே அகத்திற்குள்.

நேற்று முழுவதுமே அனிதாவிற்கு ஒதுக்கப்பட்ட எபிசோட் தான். ஆரம்பம் முதல் இறுதி வரை அனிதாவை வச்சி செய்து விட்டார் ஆண்டவர். கமல் அவர் வேலையை சிறப்பாக செய்தார். ஆனால் அவர் பேச வேண்டிய விஷயமா இது. இந்த சீசனில் உப்புப் பெறாத விஷங்களை எடுத்துக் கொண்டு பேச வேண்டி இருப்பது குறித்து அவருக்கே ஆயாசமாக இருந்திருக்கும்.

சென்ற வாரம் கமல் சார் ஷோ முடிந்தவுடன் சோறு தான் முக்கியம் என்ற பாலாவின் வாக்கியத்திலிருந்து ஆரம்பித்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அனிதாவின் பக்கம் திரும்பினார். "பாலும் தெளிதேனும் பருப்பும்" என்று சொல்லிவிட்டு கமல் காட்டிய எக்ஸ்பிரஷன் வசூல் தாஜா படத்தை நினைவுபடுத்தியது. "நான்கடவுள் இல்லைனு இப்ப அவங்கிட்ட எப்படி சொல்லுவேன்" என்ற வசனத்தை சொல்லும் போது கமல் கொடுத்த எக்ஸ்பிரஷன் அது. அட்டகாசம்.

ஆனால் இந்த விஷயத்தில் அது மட்டும் தான் ரசிக்கதக்கதாக இருந்தது. மற்றவை எல்லாம் அரைச்ச பருப்பை திரும்பவும் அரைத்து நம்மையும் கொடுமை படுத்தி விட்டார்கள். ஒரே ஆறுதல் கமலின் மேனரிசங்களும் அவரின் டைமிங் கமெண்ட்களும் மட்டுமே. அனிதாவை பயங்கரமாக கலாய்த்தாலும், அவரின் மனம் நோகாதபடி தான் அதை செய்தார். ரொம்பவும் ஜாலியாக இருந்தார்.

பருப்பை ஊறப்போட்டு வடையும், கூட்டும் செய்யலாம் என்று ப்ளான் செய்ததாக அனிதா சொன்னவுடன் "அதெல்லாம் செய்வீங்களா" என்று கலாய்த்தார். காப்பி போடத் தெரியாது, வீணாக்கி விடுவேன்னு என்று அனிதா சொன்ன காரணத்தை, பாலாவிடம் சொன்ன விதம் செம்ம.

பாலாவின் கேப்டன்சி குறித்தும் அதிகமாக கேட்டறிந்தார். கிச்சனில் பாலா எடுத்த முன்னெடுப்புகள், டாஸ்க்கின் போது பிரச்சினை வரக்கூடாது என்று பாலா செய்த விஷயங்கள், பாலாவினுடைய ஸ்ட்ராட்டஜி பெரும்பாலும் பாரட்டபட்டது. இருந்தாலும் பாலாவினுடைய குறைகளை சுட்டிகாட்டவும் தவறவில்லை.

ஆரி-அனிதா சம்பவத்திலும் இரண்டு பக்கமுமே பேசினார். ஆரியுடன் பேசிக் கொண்டிருந்த போது அனிதா கை தூக்கியபடியே இருந்தார். "உங்களுக்காக தான் பேசறேன், வேணாம்னா நீங்களே கூட பேசிக்கலாம்" என்று கடுமை காட்டவும் தவறவில்லை.

தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக பேசப்பட்ட விஷயத்தை பொது சபையில் எடுத்து பேசியிருக்க வேண்டியதில்லை என்று ஆரியிடம் எடுத்துச் சொன்னார். அதே சமயம் அனிதா கோபபட்டதையும் கண்டித்தார். அதற்கு அவர் சொன்ன டி ஆர் மகாலிங்கம் உதாரணம் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. ஆரியை பேச விட்டிருந்தாலும் அனிதாவின் குடும்பம் பற்றி தவறாக எதுவும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று ஆரிக்கும் சப்போர்ட் செய்தார். அனிதாவை பற்றிய ஆரியின் கதாகலாட்சேபம் நன்றாகவே இருந்தது.

ஆரிக்கு அனிதா அளித்த பரிசுகள் பற்றியும் விசாரணை வந்தது. அனிதா அளித்த துணி துவைக்கும் பிரஷ், காது குடையும் பட்ஸ்க்கு அவர் அளித்த விளக்கம் எந்த விதத்திலும் திருப்தி அளிக்கவில்லை.

பாலா திமிராக பேசியதால் தான்மனிப்பு கேட்கவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா. இடைவேளையிலும் அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆரியை சேவ் செய்ததோடு நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது. இன்றைக்கு யார் வெளியேறுவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>