ரஜினிக்காக தளபதி பட கதாபாத்திரமாக மாறிய பிரபல நடிகர்..

by Chandru, Dec 27, 2020, 13:43 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டார். ரஜினி நன்றாக இருப்பதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அவரை வெவ்வேறு சமூக ஊடக தளங்களில் விரைவாக குணம் அடைய விருப்பம் தெரிவித்து மெசேஜ் வெளியிட்டு வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன், டோலிவுட்டைச் சேர்ந்த பவன் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் பிரபலங்கள் ரஜினி விரைவாக குணம் அடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மெகாஸ்டார் மம்மூட்டி வெளியிட்டுள்ள ட்வீட் மற்றவற்றிலிருந்து மாறுபட்டிருக்கிறது.

அவரது ட்வீட் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஞாபகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய திரைப்படமான தளபதியின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது, இதில் ரஜினி மற்றும் மம்முட்டி முறையே சூர்யா மற்றும் தேவா என்ற பாத்திரங்களில் நடித்தனர். சூர்யாவுக்கும் தேவாவுக்கும் இடையிலான நட்பின் கதை கோலிவுட்டில் இன்னும் ஒரு அளவுகோலாகவே உள்ளது. மம்மூட்டி தனது ட்வீட்டர் மெசேஜில், “விரைவில் குணம் அடையுங்கள் சூரியா. அன்புடன் தேவா ” என குறிப்பிட்டிருக்கிறார். இந்த டிவிட்டர் மெசேஜ் வைரலாகி, இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சில ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் இந்த ட்வீட் மிகவும் உணர்ச்சி வசப்பட்டதாகவும், இதுபோன்ற நேரத்தில் இந்த பதிவு மிகவும் தேவை என்றும் கூறினார்.

தேவாவின் செய்தி சூர்யாவின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஒரு சிலர் கூறினர். உற்சாகமடைந்த ரசிகர்கள் சிலர் படத்தில் இருந்து சில ஸ்டில்களை ட்வீட் செய்தனர், அதில் ரஜினி மம்மூட்டி இரண்டு நட்சத்திரங்களும் ஒன்றாகக் காணப்பட்டனர். முன்னதாக ரஜினிகாந்த் ஐதராபாத்தில் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் கடந்த 14ம் தேதி முதல் நடித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்றுமுந்தினம் ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

You'r reading ரஜினிக்காக தளபதி பட கதாபாத்திரமாக மாறிய பிரபல நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை