அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகர் செந்திலை நீக்கி கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு முன்னிட்டு அ ம மு க வில் பல்வேறு புதிய மாற்றங்களை டிடிவி.தினகரன் அறிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டங்களில் கட்சி பணிகளை எளிதாக மேற்கொள்வதற்காக பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அதற்கென புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார். விரைவில், தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கவும் டிடிவி.தினகரன் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகர் செந்திலை திடீரென நீக்கி டிடிவி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர் செந்தில் கடந்த 2019ம் ஆண்டு அமமுகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக செந்தில் கட்சி ரீதியான நடவடிக்கைகளில் அவர் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்ததார். இதனாலேயே அவரின் பதவி பறிக்கப்பட்டதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் கடந்த 24ஆம் தேதி செந்தில் புதுக்கோட்டையிலுள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்திற்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் யாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்பதை ஜனவரி மாதம் கூறுவேன், அதிமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் உள்ளதா என்பதை தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்வோம், நான் இப்போது நடுநிலையாக தான் உள்ளேன். சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். அவரது இந்த பேச்சு தான் டிடிவி தினகரனை கோபமடைய செய்தது என்றும் அதனாலேயே அவரது பதவி பறிக்கப்பட்ட தாகவும் சொல்லப்படுகிறது. அனேகமாக அவர் அதிமுகவில் இணையலாம் என்று பேச்சு அடிபடுகிறது.