டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

by Mahadevan CM, Jan 10, 2021, 15:12 PM IST

ஆண்டவர் தினம். பிக்பாஸ் நிகழ்ச்சியால் என்ன நன்மை நடந்து விடப்போகிறது என்ற கேள்விக்கு விடையாக வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

டிக்கட் டூ பைனல் போட்டிகளின் இறுதி டாஸ்க் தொடர்ந்தது. ரம்யா மற்றும் ஷிவானி இருவருமே டாஸ்க்கை தொடர்ந்தார்கள். பைனல் டிக்கெட்டில் பாயிண்ட்ஸ் அடிப்படையில் சோம் ஏற்கனவே தகுதி பெற்றது தெரிந்தும், ரம்யாவும், ஷிவானியும் போட்டி மனப்பான்மையை விட்டுக் கொடுக்காமல் இருந்தது பாராட்டத்தக்கது. ஏற்கனவே 2 மணி நேரத்தை கடந்து நிலையில், இப்போது ஒரு கையில் மட்டும் கயிறை பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் அடுத்த போட்டியாளரை பந்தால் அடிக்க வேண்டும். ஏற்கனவே வலியால் துடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த டாஸ்க் இன்னும் கடினமாக இருந்தது. வலியில் இருக்கும் நபரை பந்தால் அடிப்பது கஷடமாக இருந்ததால் இருவருமே அழுதுவிட்டனர்.

பிறகு ஹாப் ஸ்குவாட்டில் அமரும்படி கேட்டுக்கொண்டார் பிக்பாஸ். அந்த நிலையில் அமரும் போது ரம்யாவால் தொடர முடியவில்லை. கயிறை விட்டுவிட்டார். அவர் விட்ட சிறிது நேரத்துல் ஷிவானியும் கயிறை விட்டு கீழே விழுந்தார். இருவரையும் வீட்டுக்குள் தூக்கிக் கொண்டு போனார்கள் சோமும், பாலாவும்.

அடுத்த நாள் காலை பாயிண்ட்ஸ் அப்டேட் செய்திருந்ததை பார்த்து டென்ஷன் ஆகிவிட்டார் ஆரி. பாலா 1 பாயிண்ட் மட்டுமே எடுத்தது அவரை மிகவும் பாதித்து விட்டது போல. ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பற்றி பேசி பாலாவை போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு தான் காரணமாகிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் ஆரி கண்கலங்கினார். இந்த போட்டியில் அனைவரும் விதிகளை மீறி இருக்கிறார்கள். ஆனால் பாலாவை மட்டும் ஆரி குற்றம் சாட்டினார். அதை நினைத்து குற்ற உணர்ச்சி கொண்டதாக மீண்டும் பேசிக் கொள்ளும் போது சொல்கிறார். அந்த நேரத்தில் பாலாவும் தன் பங்குக்கு ஆரியுடனான சண்டைகளுக்கு வருத்தம் தெரிவித்தார். எத்தனை தடவை தான்யா இதே சீனை பார்க்கறது. இந்த சீன் நமக்கு காண்பிக்கப்படும் போதே, அதை கமலும் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாலாவின் மனமாற்றத்தை தான் இந்த்ச் பிக்பாஸ் சீசனில் நடந்த நல்ல விஷயமாக பார்க்கிறார். உண்மையில் பாலாவின் இந்த மாற்றம் பாராட்டப்பட வேண்டியதே. ஆரம்பத்தில் இருந்தே பாலாவை கொஞ்சமாக தூண்டி விட்டாலே, கோபத்தை அடக்க முடியாதவராக கண்டபடி பேச ஆரம்பித்து விடுவார். நேற்று முந்தினம் நடந்த டாஸ்க்கில் ஆரி ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் பற்றி பேசும் போது முடிந்தவரை கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தார். அதுவே மனமாற்றம் தான்.

இந்த நல்ல மாற்றஙகளை பற்றி பேசிய கமல் அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றார்.

டிக்கட் டூ பைனல் டாஸ்க்குகள் அனைத்திலும் சிறப்பாக பங்குபெற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வாழ்த்துச் சொன்னார்.

பைனலுக்கான முதல் நபராக சோம்சேகர் தேர்வு பெற்றார். அவருக்கான டிக்கட் வழங்கப்பட்டது. சோமை பாராட்டிய அதே வேளையில் அவரது தாயாரையும் வீடியோ கான்பரன்ஸில் அழைத்து பேசினார் கமல். சோம் பைனலுக்கு சென்றதை பற்றி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் கருத்து கேக்ஷ்டறிந்தார்.

பிறகு இறுதி டாஸ்க்கில் மன உறுதியுடன் நீண்ட நேரம் விளையாடிய ரம்யா மற்றும் ஷிவானிக்கு பாராட்டுதல்களை தெரிவித்தார். டாஸ்க் பற்றி இருவரிடமும் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

பிறகு தமிழ் வார்த்தைகள், திருக்குறள், முதுமொழிகள் யார் யாருக்கு என்ன கிடைத்தது என்பதை பற்றிய ஒரு அலசலும் நடந்தது. பைனல் நெருங்கி விட்ட நிலையில், தொடர் பிரச்சாரத்தால் கமலிடமும் சோர்வு தெரிந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. கரகாட்டகாரி ரம்யா என்று அழைத்து ரம்யாவுக்கு புதுப் பெயரை சூட்டினார்.

இறுதியில் ஆரியை சேவ் செய்து விடைபெற்றார். . இன்று எவிக்‌ஷன் தினம் என்பதால் ஏதாவது சுவாரஸ்யமாக நடக்குமா என்று பார்ப்போம்.

You'r reading டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?? Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை