மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..

by Logeswari, Jan 12, 2021, 16:57 PM IST

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கலக்கி கொண்டிருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து கொண்டு வருகின்றனர். இதனை பத்மஸ்ரீ கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் இன்று முதல் 100 நாட்களை கடந்து விட்டது. இந்த சீசன் மற்ற சீசனை விட சிறிது மாறுபட்டது.

ஏனெனில் எந்த சீசனிலும் இவர் தான் வெற்றி பெறுவார் என்று ஆணி தனமாக சொல்ல முடியாது. ஆனால் இந்த சீசனில் அப்படி சொல்ல முடியும். பலர் ஆரி தான் இந்த பிக் பாஸின் டைட்டில் வின்னர் என்று அழுத்தி சொல்லி வருகின்றனர். இது உண்மையா என்பது விஜய் தொலைக்காட்சியின் கையில் தான் உள்ளது. இந்நிலையில் நேற்றில் இருந்து பழைய ஹவுஸ் மேட்ஸ் ஆன அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா என பலரும் பிக் பாஸ் வீட்டிற்கு படையெடுத்துள்ளனர்.

இன்று டம்மி மம்மி சாம், சனம் ஆகியோர் வருகின்றனர். இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் ஒரு டாஸ்க் வைக்கிறார். அதில் ரேகா தனது தந்தையின் மரணத்தை பற்றி கண் கலங்கி கூறுகிறார். நான் என் அப்பாவை நன்றாக பார்த்து கொள்ளவில்லை என்று சொல்லி கொண்டே கதறி கதறி அழுகிறார். இதை பார்த்த மற்ற ஹவுஸ் மேட்ஸும் கண் கலங்கி ரேகாவை சமாதானம் செய்து வைக்க இன்றைய மூன்றாவது ப்ரோமோ முடிவு அடைகிறது.

You'r reading மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.. Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை